இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இயக்குனர்கள் சங்க தலைவராக விக்ரமன் இருந்து வருகிறார். அடுத்த மாதம் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் போட்டியின்றி தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.

இரு ஆண்டுகளுக்கு அவர் தலைவராக இருப்பார். மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிகிறது.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இயக்குனர் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராக தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts