இயக்குனர்கள் சங்க தலைவராக பாரதிராஜா தேர்வு

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இயக்குனர் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இயக்குனர்கள் சங்க தலைவராக விக்ரமன் இருந்து வருகிறார். அடுத்த மாதம் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் போட்டியின்றி தலைவராக பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார். இரு ஆண்டுகளுக்கு அவர் தலைவராக இருப்பார். மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என தெரிகிறது. நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இயக்குனர் சங்கத்துக்கு பாரதிராஜா தலைவராக தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிரேசி மோகன் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார்

நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், கிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், நாடகத்துறை, திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர். கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர் நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்கள் ஏற்று நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார். இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து அவர் மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம்,…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 23

தேவன்பேரில் நம்பிக்கையும் அதனால் அடையும் ஆறுதலும். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ? சங்கீதம் 56:13. கடந்த சில மாதங்களாக அல்லது வாரங்களாக இலங்கையில் உள்ள மக்களின் துயரங்களை பத்திரிகையில் நாம் அனைவரும் படித்திருப்போம். அவர்களின் வாழ்க்கையில் அமைதி ஏற்படாதவென ஏங்கும் நிலை சகலருக்கும் அதிகரித்து வருவதை நாம் அனைவரும் உணரக்கூடியதாக உள்ளது. அமைதி வருவதைப்போல நிழல் தெரிந்தாலும் அது கானல் நீரைப்போல மறைந்து விடுகிறது. அந்த வேதனையின் நிமித்தம் எமக்கு விடுதலை கிடையாத என்ற எண்த்துடன் மாத்திரமல்ல, விடுதலையைக் குறித்ததான எண்ணமற்றவர்களாகவும் வாழவேண்டி வருவதைக் காணும்போது நாம் அனைவரும் மிகவும் துக்கப்படவேண்டியதாக உள்ளது. அப்படியான துன்ப துயரங்களோடு வாழும் மக்களுக்காக இந்த…

பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் கவலைக்கிடம்

பல படங்களில் வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேஸி மோகம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நாடக கலைஞர் கிரேஸி மோகன். இவர் முதன் முதலில் பாலசந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரைகள்’ படத்துக்கு வசனம் எழுதினார். பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ’அபூர்வ சகோதர்கள்’, ’இந்தியன்’, ’அவ்வை சண்முகி’, ’தெனாலி’, ’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றியிருக்கிறார். தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்க வைத்தவர் கிரேஸி மோகன். தற்போது உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க.இரட்டை தலைமைக்கு எதிர்ப்பு எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க-பாரதீய ஜனதா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் வெற்றி பெற்றார். அதே நேரத்தில் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. ஒரு பக்கம் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் கிடைத்த சந்தோஷம் கிட்டியபோதிலும், நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தது அ.தி.மு.க. தலைமையை உலுக்கியது. மத்தியில் பாரதீய ஜனதா மந்திரிசபையில் அ.தி.மு.க. வுக்கு பிரதி நிதித்துவம் வழங்கப் படாததும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.வும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன் செல்லப்பா திடீரென்று நேற்று முன்தினம், கட்சிக்கு அதிகாரமிக்க ஒற்றை தலைமைதான் வேண்டும் என்றும், இது குறித்து விவாதிக்க பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும்…

நடிகர் வடிவேலு ஆணவம் பிடித்த நடிகர்..!

நடிகர் வடிவேலு ஆணவம் பிடித்த நடிகர் என டைரக்டர் நவீன் தெரிவித்துள்ளார். டைரக்டர் சிம்புத்தேவனுக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட மோதலால் இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகம் படம் முடங்கி உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளதால் கடந்த 2 வருடங்களாக வடிவேலுவை தயாரிப்பாளர்கள் யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த நிலையில் சிம்புத்தேவனையும் இயக்குனர் ஷங்கரையும் வடிவேலு கடுமையாக விமர்சித்தார். அவர்களால்தான் படம் நின்று போனது என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு மூடர் கூடம், அக்னி சிறகுகள், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்களை இயக்கிய நவீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “அண்ணன் வடிவேலுவின் நேர்காணல் பார்த்தேன். இயக்குனர் சிம்புத்தேவனை, சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாதவர்…