விஜய்யின் 64-வது படம் ஜோடியாக ரகுல்பிரீத் சிங்

விஜய்யின் 64-வது படத்தில் கதாநாயகியாக ரகுல் பிரீத் சிங்கை பரிசீலிக்கின்றனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘சர்கார்’ படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது. இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதில் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக தகவல். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. படத்தின் தலைப்பையும், விஜய் தோற்றத்தையும் அவரது பிறந்த நாளையொட்டி வருகிற 21-ந் தேதி மாலை வெளியிடுகிறார்கள். படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்துக்கு பிறகு விஜய்யின் 64-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், வினோத், பேரரசு ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. மோகன்ராஜாவும், “விஜய்யை வைத்து வேலாயுதம் படத்தை இயக்கி உள்ளேன். மீண்டும் அவர் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார். தற்போது விஜய்யின்…

நீட் தேர்வு தற்கொலைகள்:நடிகை கஸ்தூரி வருத்தம்

நீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து வருமாறு:- நீட் தேர்வோ, பள்ளி இறுதித் தேர்வோ, எந்த தோல்வியும் தற்காலிகம் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். பிள்ளைகள் மட்டுமல்லாது அவர்களை சுற்றி உள்ளோரும் உணர வேண்டும். தேர்வில் ஒரு முறை தோற்றுவிட்டால் மனம் தளராமல் அதை ஒரு சவாலாக ஏற்று மீண்டும் முயலவும், வெல்லவும் பிள்ளைகளுக்கு போதிய ஊக்கத்தையும், ஆதரவையும் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நல்க வேண்டும். பிள்ளைகள் படிப்பு விஷயத்தில் பெற்றோர்களே முதிர்ச்சி இல்லாமல் நடந்துகொள்கிறார்கள். இது போதாது என்று அரசியல் வேறு. அரசியல் தீர்வு வரும்போது வரட்டும். அதுவரை மாணவர்கள் மனதை அலைபாய விட வேண்டாம். தற்கொலை செய்துகொள்வோர் எல்லாம் அனிதா அல்ல. அனிதாவை போல தற்கொலை செய்துகொள்ளலாம்…

கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன்? நடிகை டாப்சி

டாப்சி கதாநாயகியாக நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை அஸ்வின்குமார் டைரக்‌ஷனில், சசிகாந்த் தயாரித்து இருக்கிறார். இந்த படக்குழுவினர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள். நடிகை டாப்சியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு;- கேள்வி:- ‘கேம் ஓவர்’ படத்தில் உங்களுக்கு என்ன வேடம்? பதில்:- ‘வீடியோ கேம்’ டிசைனராக நடித்து இருக்கிறேன். கேள்வி:- இந்தி பட உலகுக்கு சென்றது ஏன்? அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காகவா? பதில்:- அதிக சம்பளம் மட்டுமே காரணம் அல்ல. பெரும்பாலும் எல்லா கதாநாயகிகளுமே இந்தி படத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கேள்வி: உங்களை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கிறார்களாமே..? பதில்:- அப்படி என்னை அழைப்பது தவறு. அந்த பட்டம் எல்லா வகையிலும் நயன்தாராவுக்குத்தான் பொருந்தும். நான் திரையுலகுக்கு வந்து 7 வருடங்கள்தான்…

இலங்கை உளவுத்துறை தலைவர் நீக்கம் சிறிசேனா நடவடிக்கை

இலங்கையில் ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது 3 ஓட்டல்கள் மற்றும் 3 தேவாலயங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 258 பேர் பலியானார்கள். 500 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த நாளில் இருந்தே இலங்கையில் ஒரு நெருக்கடி நிலை நிலவி வருகிறது. இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு முன்பாகவே இந்தியாவில் இருந்து இலங்கையில் ஐ.எஸ். இயக்கத்தினர் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக எச்சரித்ததாகவும், இதுபற்றி அதிபர் சிறிசேனாவிடம் தெரிவித்ததாகவும் இலங்கையின் தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மெண்டிஸ் கூறியிருந்தார். ஆனால் இதனை அதிபர் சிறிசேனா தொடர்ந்து மறுத்துவந்தார். நடைபெற இருக்கும் தாக்குதல் பற்றி தனக்கு எதுவும் தெரியாது. தாக்குதல் நடைபெறுவதற்கு 13 நாட்கள் முன்னதாக கூட தேசிய போலீஸ் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போதும் எந்த அதிகாரியும் தாக்குதல் எச்சரிக்கை குறித்து…

மோடிக்கு உயரிய விருது மாலத்தீவு அதிபர் வழங்கினார்

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது. முதல் வெளிநாட்டு பயணம் 2-வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை அண்டை நாடான மாலத்தீவுக்கு மேற்கொள்ள முடிவு செய்தார். அந்த நாட்டின் முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன், சீனாவுடன் மிகுந்த நட்புறவு பாராட்டி வந்தார். அவர் உள்நாட்டு கட்டமைப்புக்காக பெருந்தொகையை சீனாவிடம் கடன் பெற்று, மாலத்தீவை கடன் பிடியில் தள்ளினார். ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் இப்ராகிம் முகமது சோலி வென்றார். அவர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தார். அதிநவீன ‘ரேடார்’ சீன போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை கண்காணிக்கிற வகையில், மாலத்தீவில் அதிநவீன ‘ரேடார்’…

எமக்கு வேறு வழி இருக்கவில்லை ஹக்கீம்

முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் அல்­லது அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா என்­பதே தற்­போ­தைய அர­சியல் சூழலில் அனைத்து தரப்­பி­ன­ராலும் பேசப்­பட்டு வரும் விட­ய­மாக உள்­ளது. நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முதல் தட­வை­யாக முஸ்லிம் பிர­தி­நி­திகள் இல்­லாத அமைச்­ச­ர­வை நாட்டில் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அண்­மையில் எடுத்த அர­சியல் தீர்­மானம் அதிர்ச்சி வைத்­தியம் கொடுப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் இந்த முடிவின் பார­து­ரத்­தன்மை அதன் விளை­வுகள் எதிர்­கால நகர்­வுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமை கேசரி சார்பில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். அதன்­படி எமது கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில்கள் வரு­மாறு Q:ஒட்­டு­மொத்த முஸ்லிம் அமைச்­சர் ­களும் அமைச்­ச­ர­வை­யிலும் அர­சாங்­கத்­திலும் அங்கம் வகிக்­க­மாட்­டீர்கள் என்று வர­லாற்றில் எப்­போ­தா­வது எண்­ணி­ய­துண்டா? பதில்: இவ்­வா­றான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் அமைச்சர்…

அதிகாரத்தினை தன்வசம் வைத்துக்கொள்ள ஜனாதிபதி புதிய வியூகம்

ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்கி வருகின்ற நிலையில் அடுத்து தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவித்திருந்தார். எனினும் அடுத்த கட்டமாக ஆட்சி அதிகாரத்தினை தன்வசம் வைத்துக்கொள்வதற்கு மும்முனை நகர்வுகளை மேற்கொண்டிருப்பதாக நம்பகரமான தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது. முதலாவதாக, பொதுஜன முன்னணியுடன் கூட்டணியொன்றை அமைப்பதென்றால் பொதுவேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பெயரிடவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரி அணியினர் வலியுறுத்தி வந்தபோதும் பொதுஜன முன்னணியில் அதற்கான எந்தவிதமான இணக்கமும் இதுவரையில் தெரிவிக்கப்படவில்லை. முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வணியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதியாகிவிட்ட நிலையிலும் சிங்கப்பூரிலிருந்து அவர் நாடு திரும்பியதும் உறுதியான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என்று அறிய முடிகின்ற நிலையில் பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிக்கு வாய்ப்புக்களை வழங்குவது சாத்தியமில்லை. மறுபக்கத்தில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் ரணில் அல்லாத ஒருவர்…

மோடி, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கை வருவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனிடையே, ´அயல் நாட்டவருக்கு முன்னுரிமை´ என்ற கொள்கையின் அடிப்படையில், தான் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நேற்று மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுடனான இருதரப்பு உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் வலுவடையும் என்றும் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியப் பிரதமர் கடந்த 30 ஆம் திகதி 2 வது பதவிக் காலத்திற்காக சத்தியப்பிரமாணம்…