டென்மார்க் பாராளுமன்ற தேர்தல் சோசல் டெமக்கிரட்டி வெற்றி: பெண் பிரதமர்

டென்மார்க்கில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சோசல் டெமக்கிரட்டி கட்சி தலைமையிலான சிவப்பு அணி 91 ஆசனங்களை பெற்றுள்ளது. தோல்வியடைந்த வென்ஸ்ர தலைமையிலான ஆளும் கட்சிக்கு 79 ஆசனங்கள் கிடைத்துள்ளன. நடுவில் நின்ற அல்ரானற்றிவ் கட்சி 4 ஆசனங்களை பெற்று பின்னடைவு கண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் சிவப்பு அணியில் உள்ள எஸ்.எப், றடிகல வென்ஸ்ர ஆகிய இரு கட்சிகளும் இரட்டிப்பு அதிகமான ஆசனங்களை பெற்றுள்ளன. ஆட்சியமைக்கும் தலைமையை பெற்றாலும் கூட, சோசல் டெமக்கிரட்டி கட்சி சென்ற தேர்தலைவிட இந்தத் தேர்தலில் ஓர் ஆசனத்தை மட்டுமே அதிகமாக பெற்றுள்ளது.

சிவப்பு அணியின் வெற்றிக்கு எஸ்.எப்., றடிகல வென்ஸ்ர, என்கில்ஸ்லிஸ்ற் ஆகிய சிவப்பு கூட்டு கட்சிகளின் வெற்றி துணை புரிந்துள்ளது.

அதேவேளை ஆளும் வென்ஸ்ர கட்சியின் தோல்விக்கு காரணம் என்ன..?

இதுவரை காலமும் அக்கட்சிக்கு பெரும் துணையாக அமைந்த டேனிஸ் மக்கள் கட்சி அரைப்பங்கு ஆசனங்களை இழந்து பலத்த அடி வாங்கியதால் வலது கை முறிந்த நிலையில் ஆளும் வென்ஸ்ர ஆட்சியிழந்துள்ளது. இன்று பகல் 11 மணிக்கு பிரதமர் லாஸ் லுக்க ராஸ்முசன் மகாராணியை சந்தித்து தனது கட்சியின் பதவி விலகலை தெரிவிக்கவுள்ளார்.

மறுபுறம் ராஸ்முஸ் பலுடன் என்ற ஸ்ரம்கூஸ் என்ற கடும்போக்குவாத கட்சி ஆசனங்கள் எதுவும் இல்லாமல் தூக்கி வீசப்பட்டது. ஆயினும் தேர்தல் நிதி அதிகம் கிடைத்த காரணத்தால் அவர் ஆடம்பர ஹோட்டல்களில் வாழ்வு தொடரவும் மேலும் பல நூறு குர்ரான்களை தூக்கி வீசி வேடிக்கை காட்டவும் வழியுள்ளது. நேற்றும் மிக ஆடம்பரமான கோட்டலில் இருந்து மதிய போசனம் எடுத்துள்ளார். பிழைக்க தெரிந்தவர்.

அடுத்த தப்பிப் பிழைத்தது லிபரல் அலையன்ச கட்சியாகும் பெரும் பின்னடைவு கண்டு 2.3 வீதமான வாக்குகளை பெற்று தப்பிப் பிழைத்துள்ளது. இவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 82.323 ஆகும். இன்னொரு புறம் புதிய கட்சியான நியூபோலி 2.4 வீதமான வாக்குகளை பெற்று 83.229 வாக்குகள் மொத்தமாக பெற்று லிபரல் அலையன்சவை முந்தியுள்ளது, இது புதிய கட்சியாகும்.

கிளவுஸ் றிஸ்கெயா பீட்டர்சன் கட்சி வெறும் 26.621 வாக்குகளையே பெற்றுள்ளது. இவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இரண்டு ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்லி டெமக்கிரட் கட்சி 61.212 வாக்குகள் மட்டுமே பெற்று 1.8 வீதமான வாக்குகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதால் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை. 75.576 வாக்குகளை பெற்றால் மட்டுமே ஒரு கட்சி பாராளுமன்றம் வரமுடியும். அதுவே இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை பெற்ற 4.2 மில்லியன் வாக்காளர் தொகைக்கான 2 வீதமாகும்.

டேனிஸ் போல்க்க பார்டி 8.7 வீமதன வாக்குகள் பெற்று 12.4 வீதம் பின்னடைவு கண்டு 21 ஆசனங்களை பறி கொடுத்துள்ளது. வென்ஸ்ர கட்சி 9 ஆசனங்கள் அதிகம் பெற்றுள்ளது. கொன்ஸ்ச வேட்டிவ் கட்சியும் 6 ஆசனங்கள் பெற்று முன்னேறியுள்ளது.

இனி வரும் நாட்களில் மந்திரிசபை அமைக்கும் பேரம் பேசல் நடக்கும். சிறிய கட்சிகள் சோசல் டெமக்கிரட்டியை துன்பப்படுத்தினால் தாம் இணைந்து ஆட்சி நடத்த தயார் என்று வென்ஸ்ர கட்சி தலைவர் கூறுகிறார். அதற்கு பரிசாக பிரதமர் பதவியை கேட்கிறார்.

இவையெல்லாம் வரும் நாட்களில் வரும் பேச்சுக்களாகும்.

எப்படியோ ஓர் ஆட்சி மாற்றம் வந்தது நல்ல விடயமே என்கிறார்கள் பலர்.

இந்தத் தேர்தல் வெளிநாட்டவர் வெறுப்பு அரசியல் வங்குரோத்தடைந்துவிட்டதை காட்டுகிறது. வெளிநாட்டு வெறுப்பு அரசியலை வைத்து பதவியில் இருந்து சுகபோகம் கண்டவர்கள் அடைந்த முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதை டேனிஸ் வாக்காளர் கண்டுபிடித்துவிட்டார்கள் போலிருக்கிறது.

அலைகள் 06.06.2019

Related posts