ரகசியமாவா நடக்குது? தளபதி 63

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து ஷூட்டிங் ஸ்டில், விஜய் ஸ்டில்கள் அவ்வப்போது லீக் ஆனது.

இந்நிலையில் படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 22ம் தேதி விஜய்யின் பிறந்த நாளின்போது வெளியாகும் என்று தெரிகிறது.

சமூக வலைத்தளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனாவிடம் ஃபர்ஸ்ட்லுக் பற்றி அப்டேட் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர்.

ரசிகர்கள்தான் இப்படியென்றால் தயாரிப்பாளரின் தங்கை ஐஸ்வர்யாவும் அதே நிலைமையில்தான் இருக்கிறார். ஷூட்டிங்கில் என்ன நடக்கிறது என்று நேரிலேயே போய் தெரிந்துகொள்ளும் அளவுக்கு உறவு கொண்ட தங்கை, ‘அக்கா எனக்கு அப்டேட் வேண்டும்’ என வாய்விட்டு கேட்டிருக்கிறார்.

உடன்பிறந்த தங்கையே கூட விஜய் படம் பற்றி தகவல் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அவ்ளோ ரகசியமாவா ஷூட்டிங் நடக்குதுன்னு சிலர் கமென்ட் பகிர்கின்றனர்.

Related posts