நாளை டென்மார்க்கில் பாராளுமன்ற தேர்தல் !

டென்மார்க்கில் நாளை பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது.

கட்சிகள் தமது கடைசி நேர பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

மரண ஓட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, கருத்து கணிப்பில் பெரிய கட்சிகளில் வென்ஸ்ர கட்சி சிறிய முன்னேற்றம் அடைந்திருக்கிறது.

அதேவேளை டேனிஸ் மக்கள் கட்சி பெரிய பின்னடைவை சந்தித்து அரைப்பங்கு வாக்கு வங்கியை இழந்திருக்கிறது.

இது ஆச்சரியமான விடயம் ஆகும்.

மேலும் பல சிறிய கட்சிகள் பின்னடைவு கண்டுள்ளன அதில் ஒன்று லிபரல் அலையன்ச கட்சியாகும், அடுத்தது அல்ரான்ற்றிவ் கட்சியும் பின்தங்கி இருக்கிறது.

இந்த ஓட்டத்தில் SF கட்சி கணிசமான முன்னேற்றம் கண்டிருக்கின்றது .

பிரதமர் லாஸ் லுக்க ராஸ்முசன் தலையில் ஓடு ஒன்று விழ பார்த்து தப்பி பிழைத்து வந்து இருக்கின்றார்.

இது அவருடைய தலை தப்பி விட்டது என்ற சகுனமாக இருக்குமோ என்று தமிழ் சோதிடர் ஒருவர் கூறினார்.

ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றி பெற துடிக்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் வெற்றி பெற மரண ஓட்டம் ஓடுகிறது.

மக்களை கவர வேண்டும் என்பதற்காக பல தலைவர்கள் யாதொரு பொறுப்பும் இல்லாமல் அதிரடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்!

அதில் ஒரு பொன்குஞ்சு கருத்து றடிகல வென்ஸ்ர தலைவர் கூறினார்.. தேர்தலுக்குப் பின்னர் சோசல்டெமக்கிரட்டி கட்சியும் வென்ஸ்ர கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று கல்லைத் தூக்கிப் போட்டார்.

இவருடைய கருத்தை சோசல்டெமக்கிரட்டி கட்சி ஆதரிக்கவில்லை, கூட்டணியின் தலைவர் சொல்ல வேண்டிய கருத்தை இவர் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது கட்சி கூட்டணிக்கு பாதகமாகவே அமையும் என்று கருதப்படுகிறது.

நாளை எஸ்.எப் கட்சி கொண்டாடவும், டேனிஸ் மக்கள் கட்சி கண்ணீர் விடவும் தேர்தல் காரணமாக அமையுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

பொதுவாக கருத்துக் கணிப்பு டென்மார்க்கில் சரி வருவது உண்டு, இருந்தாலும் தற்போது அதற்கு எதிரான தீர்ப்புகள் பல நாடுகளில் வந்து கொண்டிருக்கின்றன , எனவே யார் வெல்வார் என்பதை தீர்க்கமாக கூற முடியவில்லை!

இரண்டு அணிகளுக்குள்ளும் முரண்பாடுகள் காணப்படுகின்ற காரணத்தினால் இது வரை யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாது, மதில்மேல் பூனையாக இருக்கும் வாக்காளர்கள் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள் என்றே கருதப்படுகிறது.

Related posts