இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்கிறது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியதும் அக்டோபரில் இருதரப்பு இடையே கையெழுத்து ஆனது.

ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை என அமெரிக்கா மிரட்டியது. இருப்பினும் ரூ. 40 ஆயிரம் கோடி மதிப்பில் ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகள் இடையே கையெழுத்தானது.

இப்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தில் இந்தியா முன்நோக்கி நகர்ந்தால் இந்தியா – அமெரிக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

—–

Related posts