பிரேசில் சிறைகளில் கலவரம்: 40 கைதிகள் உயிரிழப்பு

பிரேசில் உலகிலேயே அதிக சிறைக்கைதிகளை கொண்ட 3-வது நாடாக திகழ்கிறது. கடந்த ஏப்ரல் மாத கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் 1,12,305 கைதிகள் இருக்கிறார்கள். இதனால் அங்குள்ள சிறைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட இரு மடங்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக பிரேசில் சிறைகளில் கைதிகளுக்கு இடையே வன்முறை மற்றும் கலவரங்கள் மூள்வதும், சிறையை தகர்த்து தப்பி ஓடும் முயற்சிகளும் அவ்வப்போது நடக்கின்றன.

இந்த நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அமேசோனஸ் மாகாணத்தின் தலைநகர் மனாவுசில் உள்ள சிறையில் நேற்று முன்தினம் கைதிகளுக்கு இடையே பெரும் கலவரம் வெடித்தது. இதில் 15 கைதிகள் பலியாகினர்.

இந்த நிலையில், அங்குள்ள மேலும் 4 சிறைகளில் ஏற்பட்ட மோதலில் 40 கைதிகள் பலியாகினர். இதையடுத்து, சிறைகளில் பாதுகாப்பை பலப்படுத்த பிரேசிலின் மைய அரசு கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளது.

Related posts