கிளாமருக்கு ரெடியாகும் கீர்த்திசுரேஷ்

கீர்த்தி சுரேஷ் இன்னமும் கோலிவுட்டில் இழுத்து போர்த்திக்கொண்டுதான் நடித்துக்கொண்டிருக்கிறார். மாடர்ன் உடை அணிந்தாலும் அதிலும் கிளாமர் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஆரம்பத்தில் அவருக்கு கைகொடுத்து வந்த இந்த பாலிசி எப்போதும் ஒர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகமே என பலரும் அவருக்கு அட்வைஸ் தந்தனர்.

அட்வைஸை காதில் வாங்கிக்கொண்டாலும் கண்டுகொள்ளவில்லை… இந்நிலையில் கீர்த்தி இந்தியில் நடிக்கச் சென்றிருக்கிறார். அஜய் தேவ்கனுடன் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி அங்குள்ள ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க கிளாமருக்கு ரெடியாகி வருகிறார். இதற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார்.

சமீபத்தில் அஜய் தேவ்கனுடன் தே பியார் தே படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்தார். அதில் படுகிளாமராகவும், மது குடிப்பதுபோலவும் நடித்து பாலிவுட் இயக்குனர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறார் ரகுல். அந்தளவுக்கு இல்லாவிட் டாலும் ஆடை விஷயத்தில் கவர்ச்சிக்கு ஓகே சொல்ல கீர்த்தி முடிவு செய்திருப்பதாக பாலிவுட் வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்திருக்கிறது.

Related posts