வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: அமித்ஷா

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது பாஜக. 11 கோடி பா.ஜ.க., தொண்டர்களின் உழைப்பால் விளைந்த வெற்றி என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

புதுடில்லியில் உள்ள பா.ஜ.க., தலைமை அலுவலகத்தில் நடந்த வெற்றி கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் வெற்றி பெற்றுள்ளோம். வரலாற்று சாதனை வெற்றி பெற்றுள்ளோம். எதிர்கட்சிகளின் வாரிசு அரசியலுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர்.15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி கூட இல்லை. பிரதமர் மோடியால் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

உத்தரபிரதேசத்தில் என்னவாகும் என கேட்டார்கள். அந்த எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியுள்ளோம். வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்வார்கள் என்றார்கள். அது உண்மையல்ல என நிரூபித்துள்ளோம். மேற்குவங்கத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். ஆந்திராவில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், ஒடிசாவில் வெற்றிபெற்ற பிஜூ ஜனதாதளம் தலைவர் நவீன் பட்நாயக்கிற்கும் வாழ்த்துக்கள். வெற்றியை , மே.வங்கத்தில் நடந்த வன்முறையில் உயிர் இழந்த தொண்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts