இந்தியத் தேர்தல் 30 முக்கிய தகவல்கள் சற்று முன் வரை..

01. உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது : பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி பேச்சு..
02. கடந்த 70 ஆண்டுகளாக ஏழைகளாக இருந்த 7 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளோம் : அமித்ஷா
03. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
04. மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்..மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 3,00,437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
05. கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளா் பி.ஆா்.நடராஜன் 1,79,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…
06. கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி 3,91,380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…
07. நெல்லை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 1,81,256 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்..
08. சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் 456 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..
09. பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 1,73,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி…
10. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி : 15வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 2,25,340 வாக்குகள் பெற்று முன்னிலை… காங்கிரஸ் :3,86,451 பா.ஜ.க: 1,61,111 அமமுக : 83,282
11. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் வெற்றி
12. சேலம் நாடாளுமன்ற தொகுதி : 14 சுற்று முடிவில் திமுக 1,01,931 வாக்குகளை பெற்று முன்னிலை.. திமுக:3,92,011 அதிமுக :2,90,080 அமமுக : 32,751 மநீம : 39,512 நாம் தமிழர்: 21886 நோட்டா: 10950
13. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி 14வது சுற்று முடிவில் காங்கிரஸ் 2,11,594 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளது.. காங்கிரஸ்-3,62,212 பா.ஜ.க-1,50,618 அமமுக- 76,887
14. ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 2,11,261 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..
15. திருவாரூர் சட்டமன்றத் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் வெற்றி..
16. மக்களின் நம்பிக்கையை எந்நாளும் காப்பேன்… திமுக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி : மு.க.ஸ்டாலின்
17. ஆரணி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் வெற்றி..
18. அரவக்குறிச்சி சட்டமன்றத் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வெற்றி
19. வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..
20. சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜி.சம்பத் 6,479 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி..
21. நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி 20,675 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி…
22. பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து
23. திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளார் இதயவர்மன் 20,353 வாக்குகள் பெற்று வெற்றி…
24. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து..
25. பெரம்பலூர் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 3,90,411 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..
26. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி..
27. சிதம்பவரம் தொகுதியில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் 2,570 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை..
28. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நாளை மாலை நாடைபெறுகிறது.
29. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வாழ்த்து.
30. மே 26-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்பதாக தகவல்.

நேரு, இந்திராவிற்கு பிறகு லோக்சபா தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வரும் 3வது பிரதமர் மோடி.

நாடு முழுவதும் 300 க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ., முன்னிலையில் இருந்து வருகிறது. 2014 லோக்சபா தேர்தலில் பெற்ற 282 இடங்களை விட இது அதிகம். 1951-52 ல் நடைபெற்ற முதல் லோக்சபா தேர்தலில் நேரு 4 ல் 3 பங்கு ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். 1957, 1962 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முழு பெரும்பான்மை பெற்று நேரு வெற்றி பெற்றார். நாடு முழுவதிலும் பல்வேறு மொழி பிரச்னைகள் இருந்த போதிலும் காங்., தனிப்பெரும்பான்மை பெற்றது.

சுதந்திரம் பெற்ற 20 ஆண்டுகளுக்கு பிறகு 1967 ல் நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகள் இந்திரா 520 ல் 283 இடங்கள் பெற்று வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலில் இந்திரா பெற்ற முதல் வெற்றி இது. 1971 ல் நடந்த தேர்தலிலும் காங்., மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததால் 2010-2014 ம் ஆண்டுகளில் காங்., ஆட்சி பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது. 2014ல் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி 282 இடங்களில் பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் நிலையான ஆட்சி தர முடிந்தது. தற்போது பா.ஜ., மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார்.

தொடர்ந்து தொண்டர்களை சந்திக்க உள்ளார். இதற்காக அவர், பா.ஜ., அலுவலகம் வந்தார். அங்கு மோடியை பா.ஜ., தொண்டர்கள் மலர் தூவி உற்சாகத்துடன் வரவேற்றனர். மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். மோடியுடன் பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் உடன் வந்தார்.அங்கு ராஜ்நாத்சிங், சுஷ்மாவும் வந்திருந்னர்.

Related posts