அலைகள் வாராந்தப் பழமொழிகள் 23.05.2019

01. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பது முக்கியமல்ல மாறாக அந்த அறிவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் இங்கு முக்கியம்.

02. உங்கள் மூளை திறனின் அளவைவிட உங்கள் அறிவை வழிநடத்தும் சிந்தனை திறனே அதிக முக்கியமானது.

03. ஒரு குழந்தை மாபெரும் அறிஞனாக வருவதற்கு ஒரேயொரு தகுதி மட்டுமே வேண்டும் அறிஞனாவதற்குரிய ஆர்வமே அதுவாகும்.

04. எதுவும் செய்யாமல் வெறுமனே ஓர் அறிஞனாக இருப்பதைவிட, ஒரு பணியை விடா முயற்சியுடன் நிறைவேற்றி முடிப்பதே சிறந்ததாகும்.

05. உங்கள் திறனில் 95 வீதம் விடா முயற்சிதான் முக்கியம். அதில் உறுதியாக இருப்பதுதான் முக்கியம்.

06. நீ உற்பத்தி செய்வதால் மட்டும் வெற்றி வந்துவிடாது. நாட்டின் பொருளாதார நிலை எப்படியிருக்கிறதெனப் பார்க்க வேண்டும். உனது பொருட்களுக்கு கிராக்கி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும்.

07. பலர் மனப்போக்கை மாற்ற மறுக்கிறார்கள் இதனால் வெற்றி பெறவும் தவறிவிடுகிறார்கள்.

08. நீங்கள் உற்சாகம் இழந்தவராக இருத்தல் கூடாது மற்றவருக்கு உற்சாகம் ஊட்டும் ஒருவராக இருக்க வேண்டும்.

09. போதிய அறிவு இருக்கிறது என்பதைவிட அவநம்பிக்கை இல்லாத மனம் இருப்பது அவசியமாகும்.

10. சிலருடைய அவ நம்பிக்கை மனப்போக்காலேயே அவரை நாம் ஒதுக்கி வைத்துள்ளோம் என்று பல வெற்றியாளர் கூறுவதை கேளுங்கள்.

11. வெற்றியாளருக்கும் தோல்வியாளருக்கும் உள்ள வித்தியாசம் அவர்களின் திறமைகளில் இல்லை அது அவர்கள் மனப்போக்குகளிலேயே இருக்கிறது.

12. நம்மிடம் இயல்பாக உள்ள திறனை அதிகளவு மாற்ற முடியாது, ஆனால் நம்மிடம் இருப்பவற்றை நாம் பயன்படுத்துகின்ற விதத்தை நிச்சயமாக நம்மால் மாற்ற முடியும்.

13. அறிவு என்பது சக்திக்கான ஆற்றலை உள்ளடக்கியது. ஆனால் அந்த அறிவை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும்போது மட்டுமே அது சக்தியாக மாறுகிறது.

14. உண்மையான தகவல்களை சேமித்து வைக்கும் கிடங்காக உங்கள் மனதை பய்படுத்துவதைவிட, சிந்திப்பதற்கு அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

15. தகவல்களை அறிந்திருப்பதைவிட அதை எங்கிருந்து பெறுவதென அறிந்திருப்பதுதான் ஆற்றலாகும்.

16. படித்தவர் என்போரை விட, நன்கு சிந்தித்து யோசனைகளை முன் மொழிகின்ற மக்களே முக்கியமானவர்.

17. கனவு காண்பவனைவிட அக்கனவுகளை நடைமுறையாக்கும் ஒருவனே சிறந்தவன். கனவுகளை நடைமுறையாக்க தெரியாதவன் அதை கண்டு என்ன பயன்..?

18. உங்கள் சொந்த அறிவை குறைவாக மதிப்பிட வேண்டாம் அதுபோல மற்றவர் அறிவை அதிகமாகவும் மதிப்பிட வேண்டாம்.

19. உங்கள் திறமைகள் ஆற்றல்கள் மீது ஒருபோதும் நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்களிடம் நல்ல மூளை இருக்கிறது என்பது முக்கியமல்ல அதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியமாகும்.

20. உங்களுக்கு எவ்வளவு அறிவுத்திறன் இருக்கிறது என்பதை கைவிட்டு அதை எப்படி கையாழுவது என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

21. என் அறிவைவிட மனப்போக்குத்தான் முக்கியமானது என்பதை தினமும் பல தடவைகள் உங்களுக்கு நீங்களே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

22. நான் வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணத்தை மனதில் தொடர்ந்து வளர்த்து செல்லுங்கள்.

23. நீங்கள் தோற்பீர்கள் என்பதற்கு அறிவை பயன்படுத்துவதற்கு பதிலாக வெல்வீர்கள் என்பதற்கு பயன்படுத்துங்கள்.

24. ஒரு செயலை செய்யாமல் இருப்பதற்கு வயதை காரணம் காட்டுவது ஒரு நோயாகும்.

25. எனக்கு வயதாகிவிட்டது, அல்லது எனக்கு வாழ்த்து வயது போதாது என்று கூறுவதெல்லாம் தோல்விக்கு வழிகாட்டும் நோய்களாகும்.

அலைகள் பழமொழிகள் 23.05.2019 தொடர்ந்தும் வரும்.

Related posts