அனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி

பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி இந்தியாவுக்கானது.மோடிக்கானது அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்வேன். யாரையும் தவறாக நினைக்க மாட்டேன். எனக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன். தேசத்திற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணித்துக் கொண்டேன் என பிரதமர் மோடி பேசினார்.
லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:
கடின உழைப்பிற்காக அமித்ஷாவுக்கு பாராட்டுகள். பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன் 2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது.
ஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா..உலக நாடுகள் இந்தியாவில் நடந்த ஜனநாயகத்தை உற்று கவனித்தன. இந்த தேர்தலில் அதிகளவு ஓட்டளித்தனர். கடும் வெயிலிலும் மக்கள் ஓட்டு போட்டனர். சிறப்பாக தேர்தல் நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் நன்றி.

உலகிற்கு உதாரணம்:

Related posts