அலைகள் வாராந்தப் பழமொழிகள் 23.05.2019

01. உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது என்பது முக்கியமல்ல மாறாக அந்த அறிவை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதுதான் இங்கு முக்கியம். 02. உங்கள் மூளை திறனின் அளவைவிட உங்கள் அறிவை வழிநடத்தும் சிந்தனை திறனே அதிக முக்கியமானது. 03. ஒரு குழந்தை மாபெரும் அறிஞனாக வருவதற்கு ஒரேயொரு தகுதி மட்டுமே வேண்டும் அறிஞனாவதற்குரிய ஆர்வமே அதுவாகும். 04. எதுவும் செய்யாமல் வெறுமனே ஓர் அறிஞனாக இருப்பதைவிட, ஒரு பணியை விடா முயற்சியுடன் நிறைவேற்றி முடிப்பதே சிறந்ததாகும். 05. உங்கள் திறனில் 95 வீதம் விடா முயற்சிதான் முக்கியம். அதில் உறுதியாக இருப்பதுதான் முக்கியம். 06. நீ உற்பத்தி செய்வதால் மட்டும் வெற்றி வந்துவிடாது. நாட்டின் பொருளாதார நிலை எப்படியிருக்கிறதெனப் பார்க்க வேண்டும். உனது பொருட்களுக்கு கிராக்கி இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். 07. பலர் மனப்போக்கை…

தமிழகம் 40 தொகுதிகளும் ஒரே பார்வையில் திருமா. பின்னடைவு

தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றியை தனதாக்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிட்டது. வேலூர் தவிர்த்து 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவில் தமிழகம், புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 37 இடங்களில் வெற்றியை தனதாக்குகிறது. சிதம்பரம் தொகுதியில் விசிக மற்றும் அதிமுக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. தேனியில் அதிமுக முன்னிலைப் பெற்றுள்ளது. தொகுதிவாரியாக வாக்குகள் விபரம்:- 1. திருவள்ளூர் (தனி) வாக்கு வித்தியாசம்:- 250000 -த்திற்கும் அதிகம் கே. ஜெயக்குமார் (காங்கிரஸ்) வாக்குகள் - 567075 (54.88 சதவீதம்) வேணுகோபால் (அதிமுக) வாக்குகள்- 300175 (29.05 சதவீதம்) 2. காஞ்சிபுரம் (தனி) வாக்கு வித்தியாசம்:- 270000 -த்திற்கும் அதிகம் ஜி. செல்வம் (திமுக) வாக்குகள்- 679960 (55.17 சதவீதம்) மரகதம் குமரவேல் (அதிமுக) வாக்குகள்-…

மக்கள் முடிவு: ராகுல் விரக்தி

மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர். அதனை மதிக்கிறேன். தொடர்ந்து போராடுவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ராகுல் நிருபர்களிடம் கூறியதாவது: மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்கிறோம். பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். கொள்கை ரீதியில் தான் போராட்டம் நடந்தது. பிரசாரத்தின் போது, மக்கள் தான் முடிவு எடுப்பார்கள் எனக்கூறினேன் . மக்கள் தெளிவான தீர்ப்பு அளித்துள்ளார்கள். பிரதமர் மோடி, பா.ஜ.,வுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அமேதி மக்கள் ஸ்மிருதி இரானியை தேர்வு செய்துள்ளார்கள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். குறைகள் ஏதும் சொல்ல விரும்பவில்லை. மோடி மீண்டும் பிரதமர் ஆவதை மதிக்கிறேன். தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன்.…

வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: அமித்ஷா

வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றுள்ளது பாஜக. 11 கோடி பா.ஜ.க., தொண்டர்களின் உழைப்பால் விளைந்த வெற்றி என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார். புதுடில்லியில் உள்ள பா.ஜ.க., தலைமை அலுவலகத்தில் நடந்த வெற்றி கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது:17 மாநிலங்களில் 50 சதவீதத்திற்கும் மேல் வெற்றி பெற்றுள்ளோம். வரலாற்று சாதனை வெற்றி பெற்றுள்ளோம். எதிர்கட்சிகளின் வாரிசு அரசியலுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளனர்.15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்.பி கூட இல்லை. பிரதமர் மோடியால் நாங்கள் பெருமை கொள்கிறோம். உத்தரபிரதேசத்தில் என்னவாகும் என கேட்டார்கள். அந்த எண்ணத்தை தவிடுபொடி ஆக்கியுள்ளோம். வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்வார்கள் என்றார்கள். அது உண்மையல்ல என நிரூபித்துள்ளோம். மேற்குவங்கத்திலும் வெற்றி பெற்றுள்ளோம். ஆந்திராவில் வெற்றி பெற்ற ஒய்.எஸ்.ஆர். காங்., தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கும், ஒடிசாவில் வெற்றிபெற்ற பிஜூ ஜனதாதளம் தலைவர்…

அனைவரையும் அரவணைப்பேன்: பிரதமர் மோடி

பா.ஜ.,விற்கு கிடைத்த வெற்றி இந்தியாவுக்கானது.மோடிக்கானது அல்ல. அனைவரையும் அரவணைத்து செல்வேன். யாரையும் தவறாக நினைக்க மாட்டேன். எனக்காக நான் எதுவும் செய்ய மாட்டேன். தேசத்திற்கு ஒவ்வொரு நிமிடத்தையும் அர்ப்பணித்துக் கொண்டேன் என பிரதமர் மோடி பேசினார். லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின்னர் டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில் கூடிய தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: கடின உழைப்பிற்காக அமித்ஷாவுக்கு பாராட்டுகள். பா.ஜ., தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி.130 கோடி மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன் 2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் வேண்டுகோளுக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது. ஜனநாயகத்தில் தேர்தல் மிகப்பெரிய திருவிழா..உலக நாடுகள் இந்தியாவில் நடந்த ஜனநாயகத்தை உற்று கவனித்தன. இந்த தேர்தலில் அதிகளவு…

15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத காங்கிரஸ்

இந்திய தேர்தல் முடிவுகளில், 15 மாநிலங்களில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல், காங்கிரஸ் கட்சி தோற்றிருப்பது அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. பா.ஜ., 300 இடங்களிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 348 இடங்களிலும் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி வெறும், 52 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஆனால், மொத்தமுள்ள 29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில், 15 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அருணாச்சலபிரதேசம், இமாச்சல்பிரதேசம், திரிபுரா, குஜராத், மணிப்பூர், அரியானா, ராஜஸ்தான், டில்லி, ஆந்திரா, தெலுங்கானா, மிசோரம், ஒடிசா, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் மற்றும் தாத்ரா நாஹர் ஹவேலியில் காங்கிரஸ் கணக்கையே தொடங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது, ஏற்கனவே பா.ஜ., முழங்கி வந்த 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்னும் இலக்கை நோக்கி செல்வதாக பா.ஜ., தலைவர்கள்…

‘கிங் மேக்கர்’ ஆசை நிராசையானது

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் 'கிங் மேக்கர்'களாக வர ஆசைப்பட்டு வலம் வந்த தலைவர்களின் ஆசை நிராசையாகிப் போனது. லோக்சபா தேர்தலில், எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. எனவே, தாங்கள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் தலைவர்கள் என்று வலம் வந்த மாநில கட்சி தலைவர்களின் ஆசை நிறைவேறவில்லை. பா.ஜ., தனியாகவோ 300 தொகுதிகளுக்கு மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி 350 எம்.பி.,சீட்களும் பெற்றதால், 'கிங் மேக்கர்'களாக விரும்பிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோருக்கு எந்தப் பங்கும் இல்லாமல் போனது. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் சந்திரபாபு நாயுடு, ராகுல், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவர் நிறைய பேரை சந்தித்து ஓரணியில்…

இந்தியத் தேர்தல் 30 முக்கிய தகவல்கள் சற்று முன் வரை..

01. உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது : பாஜக தலைமையகத்தில் பிரதமர் மோடி பேச்சு.. 02. கடந்த 70 ஆண்டுகளாக ஏழைகளாக இருந்த 7 கோடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளோம் : அமித்ஷா 03. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சின்ராஜ் 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 04. மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்..மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 3,00,437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 05. கோவை மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளா் பி.ஆா்.நடராஜன் 1,79,009 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி... 06. கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி 3,91,380 வாக்குகள் வித்தியாசத்தில்…