ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்

நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:-

“என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ஒத்த செருப்பு படத்தை எடுத்துள்ளார். 1960-ம் ஆண்டில், இந்தியில் சுனில்தத் ‘யாதே’ என்றொரு படத்தில், தனி ஒருவராக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே இந்த ‘ஒத்தசெருப்பு’ 2-வது படம். பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்தும் இருப்பது ஹாலிவுட்டிலேயே இல்லாத ஒன்று.

ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்கவேண்டும். இதுவரை எவரும் சிந்திக்காததாக இருக்கவேண்டும். நல்ல கருத்து சொல்வதாக இருக்கவேண்டும். குறைந்த பட்ஜெட்டில் எடுத்திருக்க வேண்டும். யதார்த்தமாக இருக்க வேண்டும். நான்காவதாக படத்துக்கு நல்ல விளம்பரம் செய்ய வேண்டும். இந்த நான்குமே பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தில் இருக்கிறது. இந்தப் படத்தின் மூலமாக அவர் வெற்றிகளும் விருதுகளும் பெறுவார்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Related posts