ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும்

நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறும் படங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஒத்த செருப்பு படத்தில் நடித்து இயக்கி உள்ள பார்த்திபனை வாழ்த்தி நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ பதிவில் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:- “என் அருமை நண்பர் பார்த்திபன், நல்ல படைப்பாளி. புதிது புதிதாக சிந்திக்கக் கூடியவர். இப்போது தனி ஒருவர் மட்டும் நடிக்கும் வித்தியாசமான ஒத்த செருப்பு படத்தை எடுத்துள்ளார். 1960-ம் ஆண்டில், இந்தியில் சுனில்தத் ‘யாதே’ என்றொரு படத்தில், தனி ஒருவராக நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்தியாவிலேயே இந்த ‘ஒத்தசெருப்பு’ 2-வது படம். பார்த்திபனே தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, நடித்தும் இருப்பது ஹாலிவுட்டிலேயே இல்லாத ஒன்று. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு நான்கு விஷயங்கள் வேண்டும். படத்தின் கரு புதிதாக இருக்கவேண்டும்.…

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு மீது தாக்குதல்

தென்னாப்பிரிக்காவில் நடந்த அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார். பிரிடேட்டர், டெர்மினேட்டர், பார்பரியன், டோட்டல் ரீகால், கமாண்டோ உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னராகவும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அர்னால்டு ‘ஜர்னி டூ சைனா’, மற்றும் ‘டெர்மினேட்டர் டார்க் பேட்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் நடந்த அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அர்னால்டு கலந்து கொண்டார். அங்குள்ள நிர்வாகிகளுடன் விளையாட்டு தொடர்பாக அவர் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் வேகமாக பாய்ந்து வந்து அர்னால்டு முதுகில் தனது இரண்டு கால்களாலும் எட்டி உதைத்தார். இதை சிறிதும் எதிர்பாராத அர்னால்டு நிலை குலைந்தார். அவரது பாதுகாவலர்களும்…

அரசாங்கத்திற்கு எதிராக JVP நம்பிக்கையில்லா பிரேரணை

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (20) கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள, மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார் குறித்த நம்பிக்கை இல்லா பிரேரணையை நாளைய தினம் சபாநாயகரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

மறைந்தும் மறையா உயிர் தோப்பில் முஹம்மது மீரான்

இலக்கியங்களில் எழுத்துருவாக்கம் பற்றிய புதிய மாயைகளை ஏற்படுத்திய மிக அற்புதமான ஒரு படைப்பாளியும் தமிழ், மலையாளம் போன்ற நவீன இலக்கியம் தந்த மிகப்பெரும் சொத்து தோப்பில் முகம்மது மீரான். கதை சொல்லல் பாங்கு, புதிய மொழி, ஜாலங்களின் கட்டுடைப்பு என பல எழுத்துருவாக்க வித்தைகளை இலக்கியத்தில் தந்தவர். இலக்கியங்களில் எழுத்துருவாக்கம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு படைப்பாளிகளும் தங்களது படைப்பின் புதுமைகளுக்கு ஏற்ப எழுத்துருவாக்கங்களை மேற் கொள்வர். அவ்வகை எழுத்துருவாக்கங்களே நவீன படைப்புகளுக்கு வித்திடுகின்ற கோட்பாடாக அமைந்து விடுகிறது. யதார்த்தம் சார்ந்த படைப்புகள், புனைவுசார்ந்த படைப்புகள், ஆராய்ச்சி படைப்புகள் என அனைத்திலும் புதுமையான எழுத்துருவாக்கம் என்பது படைப்பின் காத்திரத்தன்மையினையும் பேசுபொருளையும் திறன்படச் செய்கிறது எனலாம். தோப்பில் முஹம்மது மீரான் இப்படிப்பட்ட கதைகளை சொன்னவர்தான். அண்மையில் எம்மை விட்டு அகால மரணமடைந்தார். இலக்கியங்களில் எழுத்துருவாக்கம் பற்றிய புதிய மாயைகளை…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 20

நிலையில்லா இளமையும் நிலையான தேவனும். (உன் சிருஸ்டிகரை நினை) சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இளவயதும் வாலிபமும் மாயையே. பிரசங்கி 11:10. இன்றைய சிந்தனையை விளங்கிக்கொள்ள பின்வரும் வேதப்பகுதியை தியானத்தோடு வாசிப்போம். வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் ப10ரிப்பாக்கட்டும். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட ஆனாலும் இவை எல்லாவற்றின் நிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு, இளவயதும் வாலிபமும் மாயையே. வச. 9-10. அண்மையில் இலங்கையில் நடந்த துயரசம்பவத்தில் பல இளைஞர்கள் தங்களின் வாழ்வை அர்த்தமற்ற சிந்தனைமூலமுமாகவும், கொடியசெயலின்மூலம் பல உயிர்களையும் பலகோடி பெறுமதியான சொத்துக்களையும், பலரின் வாழ் வாதாரங்களையும் அழித்துள்ளது நாம்…

ஈரான் என்ற நாடே இருக்காது துடைத்தெறிவேன் டொனால்ட் ரம்ப்

இப்படித்தான் வடகொரியாவுக்கும் சொல்லி பின் கிம் யோங் உன்னை கட்டித்தழுவியவர் என்பது தெரிந்ததே. அலைகள் 20.05.2019