சிவகார்த்திகேயன் நயன்தாரா மிஸ்டர் லோக்கல் அலைகள் விமர்சனம்..

இப்போது கோடம்பாக்கம் சினிமாவில் இரண்டு பிரிவுகள் உண்டு ஒன்று அதை வர்த்தக ரீதியாக அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் சினிமா அடுத்தது வர்த்தகத்தை மேம்படுத்தும் சினிமா.

கண்டிப்பாக மிஸ்டர் லோக்கல் அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றுள்ள திரைப்படம்தான்.

படத்தை பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது. இவ்வளவு பணத்தைப் போட்டு சிறுபிள்ளை விளையாட்டு விளையாடியிருக்கிறார்களே என்ற கவலை யாருக்குத்தான் வராது.

01. பணம் நாசம்.
02. நேரம் பரிநாசம்
03. மன உளைச்சல்
இவ்வளவு பிரச்சனையும் உண்டு.

படத்தின் கதை என்னவென்று பூதக்கண்ணாடி வைத்தாலும் கண்டு பிடிக்கவே முடியாது. நயன்தாரா சிவகார்த்திகேயனை காதலிக்க வேண்டும். இதுதான் உலகப்பெரிய மேட்டர் என்று திரைப்பட இயக்குநர் கருதியிருக்கிறார், பாவம்.

நயன்தாரா, சிவகார்த்திகேயனின் கால்சீட் கிடைத்தாலே போதும் படம் வர்த்தகமாகிவிடும் என்று நினைத்துள்ளார்கள். அதற்கு பின் படம் எடுக்கும்போது அந்த இடத்திலேயே ஏதோ அலம்பிவிட்டு போனால் சரி என்று நினைத்துள்ளார்கள்.

சிவகார்த்திகேயனின் மதுப் பழக்கம் பற்றி வந்த செய்திகள் பொய்யா மெய்யா என்பது தெரியவில்லை, ஆனால் அவர் குறித்த எதிர்மறை விமர்சனங்கள் முகத்தில் தெரிகிறது. மெரீனா படத்தில் இருந்த நடிப்பைவிட ஒரு படிட முன்னேற்றமும் தெரியவில்லை.

நயன்தாரா ஓர் உயர்வான இடத்திற்கு போய்விட்டார், அவர் மறுபடியும் வந்து கஜனி படத்தில் அஸின் போல நடப்பது கன்றாவியாக இருந்தது. படத்தின் பார்மேட் மிகமிக பழையபாணி, புரிதேய்ந்த கயிறு.

தூக்கமும் திரைப்படமும் போட்டி போட்டது திரையரங்கில் பலத்த கொறட்டை சத்தங்கள் கேட்டன. படத்தின் பிளஸ்பாயின்ட் சில விபரம் தெரியாத சிறு பெண் பிள்ளைகள் அவ்வப்போது சிரித்தார்கள்.

முதலில் ஒரு படத்திற்கு நயன்தாராவைவிட கதைதான் முக்கியம். கதை இல்லாவிட்டால் எந்த பெரிய கொம்பன் நடித்தாலும் அதோகதிதான். மிஸ்டர் லோக்கல் 100 கோடி வசூல் என்று நாளை செய்தி வரலாம். வந்தால் கண்டிப்பாக அது பணம் வேண்டி எழுதிய பொய் செய்தியாகத்தான் இருக்கும்.

நயன், சிவகார்த்திகேயன் வீழ்ச்சிக்காலம் ஆரம்பித்துவிட்டதை படம் காட்டுகிறது.

அலைகள் 18.05.2019

Related posts