தாதா ஆகிறார் தளபதி விஜய்

பத்து பேரை அடித்து வீழ்த்தும் ஆக்‌ஷன் ஹீரோவாக தொடர்ச்சியாக நடித்து வந்த விஜய், ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் சர்க்கார் படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் இணைய தள நிறுவன சிஇஓவாக நடித்து ஒருவிரல் புரட்சி வசனம் பேசி அசத்தினார். அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அட்லியுடன் விஜய் இணையும் 3வது படமாக இது உருவாகிறது. இதன் படப் பிடிப்பு சென்னையில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இதையடுத்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடித்துள்ள கைதி படம் இயக்கி இருக்கிறார். இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து விஜய் படத்தை இயக்குகிறாராம்.

விஜய்யை சந்தித்து ஸ்கிரிப்ட்டை கூறிய இயக்குனர், இது சூப்பர் ஹீரோ கதை இல்லை, கேங்ஸ்டர் கதை அதாவது தாதா கதை’ என்றாராம். அது விஜய்க்கு பிடிக்கவே பணியாற்ற தலை அசைத்திருக்கிறாராம். 50 நாட்களில் படப்பிடிப்பை எடுத்து முடிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. கேங்ஸ்டராக முதன்முறையாக விஜய் நடிக்கவுள்ள இப்படம்பற்றிய அறிவிப்பு சீக்கிரம் எதிர்பார்க்கப்படுகிறது.

————-

மீடூ விவகாரம் திரையுலகில் விட்டகுறை தொட்ட குறையாக தொடர்கிறது. தெலுங்கில் முன்னணி நடிகர்கள் நடித்த பல படங்களில் பாடல்கள் பாடியிருப்பவர் பிரனவி. நடன இயக்குனர் ரகு என்பவரை மணந்தார். பாடல் வாய்ப்பு தருவதற்காக சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்த சம்பவம் பற்றி பகிரங்கப்படுத்தி உள்ளார் பிரனவி. இதுபற்றி அவர் கூறியது: படங்களில் பாடல் பாடுவதற்கான வாய்ப்புகள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் அது.

பலரும் என்னை படுக்கைக்குத்தான் அழைத்தார்கள். பாடுவதற்கு வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒரு சிலர் பிளாக்மெயில்கூட செய்தனர். ஒரு இயக்குனர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு என்னை அழைத்தார். அங்கு சென்றபோது, ‘நீ பாட வேண்டுமென்றால் முதலில் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும்’ என்றார்.

எனக்கு உடலெல்லாம் கூசியது. அவரது ஆசைக்கு மறுத்தபோது மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். கோபம் அடைந்த நான், ‘செருப்பால் அடிப்பேன்’ என்று கூறிவிட்டு ஸ்டுடியோவிலிருந்து வெளியில் வந்துவிட்டேன்’ என்றார் பிரனவி. யாருடைய இச்சைக்கும் இணங்காத பிரனவி இன்றைக்கு திறமையால் நல்ல பாடகியாக தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறாராம்.
——

Related posts