உயிர்த் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது

உயிர்த் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் 9 பேர் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்திய 9 பேரில் அலாவுதீன் அகமது முவாத் (22) ஒருவர். இவர் கொழும்புவின் புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இவர் சட்ட கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட 9 பேர் மீதான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முவாத்தின் தந்தை அகமது லெப்பே அலாவுதீனிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், ‘சட்ட மேற்படிப்பிற்காக இலங்கை வந்தான். 14 மாதங்களுக்கு முன்பு அவனுக்கு திருமணம் ஆனது. கடந்த மே 5 ஆம் திகதி அவனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.…

இன்றைய முக்கிய சினிமா செய்திகள் 16.05.2019 வியாழன்

தமிழை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கில் படம் இயக்கி வருகிறார், கே.எஸ்.ரவிகுமார். ஏற்கனவே பாலகிருஷ்ணா நடித்திருந்த ஜெய்சிம்ஹா படத்தை இயக்கிய அவர், தற்போது மீண்டும் பாலகிருஷ்ணாவை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து கே.எஸ்.ரவிகுமாரிடம் கேட்டபோது, ‘தமிழில் முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், ஏழெட்டு படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் படத்துக்கு டைட்டில் மற்றும் ஹீரோயின் முடிவாகவில்லை. அடுத்த மாதம் ஐதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. நான்கு மாதங்களில் இந்த படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றார். ---------------- தமிழில் திரைக்கு வந்த ஜோக்கர், சகா, மேற்குத்தொடர்ச்சி மலை ஆகிய படங்களில் நடித்து இருந்தவர், மலையாள நடிகை காயத்ரி கிருஷ்ணன். தற்போது ஜீவா தங்கையாக சீறு என்ற படத்தில் நடிக்கிறார். அவருக்கும், ஒளிப்பதிவாளர் ஜீவன் ராஜுக்கும்…

எமது சமூகத்தை இழிவுபடுத்த வேண்டாம் : அமீர் அலி

இலங்­கை­யி­லுள்ள ஊட­கங்கள் தர்­மத்­தோடு செயற்­பட வேண்­டுமே தவிர தய­வு­செய்து சிறு­பான்மை சமூ­கத்தை இழி­வு­ப­டுத்­து­வ­தற்­கான வேலைத் திட்­டங்­களை செய்ய வேண்டாம் என்று விவா­சாய, நீர்ப்­பா­சன மற்றும் கிரா­மிய பொரு­ளா­தார இரா­ஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கேட்டுக் கொண்­டுள்ளார். ஓட்­ட­மா­வடி மீரா­வோடை மஸ்­ஜிதுர் ரிழா பள்­ளி­வாயல் புன­ர­மைப்பு செய்­யப்­பட்டு தொழுகை நட­வ­டிக்­கைக்­காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மேலும், தமிழ் மற்றும் சிங்­கள ஊட­கங்­களோ அல்­லது வேறு எந்­த­வொரு ஊட­க­மாக இருந்­தாலும் சரி தர்­மத்­தோடு பேச தவ­று­மாக இருந்தால் நிச்­ச­ய­மாக ஒரு சமூகம் முற்­று­மு­ழு­தாக வெறுத்து ஒதுக்­கு­கின்ற ஊட­க­மாக அது மாற்­றப்­பட்டு விடும். அவ்­வாறு இல்­லை­யாயின் ஊடக தர்­ம­மாக இல்­லாமல் அது வேறொரு கசாப்புக் கடை­யாக இருக்கும். ஒரு கத்­தியைக் கண்­டு­பி­டித்தால் அல்­லது பள்­ளி­வா­யலில் கத்­திகள் எடுத்தால் அதனை பெரி­து­ப­டுத்தி பூதா­க­ர­மாக்­கு­கின்­றனர். இந்­நாட்டில் சமை­ய­ல­றையில்…

கிளிநொச்சி வளாகத்தில் சோதனை

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இன்று (16) காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். எதிர்வரும் 20 ஆம் திகதியின்பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைய இச்சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவபீட சிற்றுண்டிச்சாலை நடத்துநர் ஆகிய மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம்இன்று (16) விடுவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, விடுதலைப் புலிகள் அமைப்பினுடைய தலைவரின் புகைப்படம் மற்றும் பதாதைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இலங்கையில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள் 16.05.2019 வியாழன்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சற்றுமுன்னர் பாராளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட 660 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை விரைவாக ஆரம்பிக்கும் படி கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டுள்ளது. ---------------- எமது பாதுகாப்பை நாங்கள் பார்த்துக்கொள்வோம். இராணுவம் குண்டை செயலழிக்க வைக்கமட்டும் வீதிக்கு வரட்டும் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இராணுவ தளபதியின் கருத்து தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எமது தமிழ் தலைவர்கள் சொன்ன ஒரு சில கருத்துக்களை திரிவுபடுத்தி சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார். அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஒரு கருத்தைக்…