Grindsted நகரில் முள்ளிவாய்க்கால் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல்..!

ஈழத்தமிழினம் வாழ போராடிய போராளிகள், அவர்கள் பக்கம் நின்ற வீரத்தமிழ் மக்கள்களையும் சிங்களம் இன அழிப்பு செய்த நாற்களை நினைவுகூர்ந்து, மனமுருகி, மலர் துவி, தீபமேற்றி ஈகம் செய்த எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காவும், அவர்களின் லட்சிய கனவு நிறைவேற வேண்டியும் இடம்பெறும் ஆராதனையில் அனைவரும் ஓன்று சேர்ந்து பிரார்த்திப்போம். காலம்: 17.05.2019 நேரம்: 15.45 - 17.00 இடம்: Grindsted Kirke Kirke gade 1 7200 Grindsted Billund நகரசபை தமிழ் மக்கள் தொடர்புகளுக்கு : 40418792

ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான கலந்துரையாடல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெறுகின்றது. எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு விஜேராம பகுதியில் எதிர்க்கட்சி தலைவரிக் இல்லத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுகின்றது. இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது. ------------ கடந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டுள்ள பல்வேறு தீர்மானங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு திருப்தியடைய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறாயினும் பொது மக்கள் சார்பாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற சரியான தீர்மானங்கள் தொடர்பாக தமது ஒத்துழைப்பினை வழங்குவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எந்நேரமும் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக பிரிவு இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அந்த…