உலகப்புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள் தொடரும் பயணம்

ரியூப் தமிழ் இலங்கை பணியகத்தால் உலகப்புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலை பாடசாலைகளுக்கு வழங்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

பாடசாலைகள் மறுபடியும் திறக்கப்பட்டுள்ளதால் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 10ம் திகதி கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் 13ம் திகதி மானிப்பாய் இந்துக்கல்லூரியும் வழங்கப்பட்டன.

வாசிக்கப்பட வேண்டிய விடயங்களை வாசிக்கப்படக்கூடிய விதமாக எழுதி வழங்கும் படைப்புக்களை மாணவரிடையே சேர்க்கவும், அவர்களுடைய சிந்தனையை சர்வதேச அளவில் வளர்க்கவும் ஆவல் கொண்டு இந்த நூல்கள் வழங்கப்படுகின்றன.

டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற இந்த நூல் மாணவர்களால் மிகவும் விரும்பி வாசிக்கப்படுவதாக பல பாடசாலைகள் தகவல் தருகின்றன.

அகில இலங்கையையும் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்ட இப்பணி தற்போதைய ஊரடங்கு சட்டங்கள் காரணமாக இடையில் சிறு தடங்கல்களை சந்திக்க நேர்ந்து, இப்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன் வழமைக்கு திரும்பியுள்ளது.

அலைகள் 14.05.2019

Related posts