சினிமாவுக்காக மாதவன் 2 வருடம் கழித்து ஷேவ்

நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி மற்றும் தாடியை வளர்த்து வந்தார். 'மாதவனா இது?' என ரசிகர்கள் கேள்வி கேட்கும் அளவுக்கு வெள்ளை முடி மற்றும் தாடியுடன் புதிய கெட்டப்புக்கு மாறினார் மாதவன். ஷூட்டிங்கின் ஒருபகுதி தற்போது முடிந்துவிட்ட நிலையில் நடிகர் மாதவன் இரண்டு வருடங்கள் கழித்து ஷேவ் செய்துள்ளார். இளம் நம்பி நாராயணன் ரோலுக்கு தான் மாதவன் தாடியை நீக்கி இளமை தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஷூட்டிங் பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. புதிய கெட்டப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாதவனின் அர்ப்பணிப்பை வியந்து பாராட்டி வருகின்றனர்.

கீர்த்தி சுரேசின் கதை தேர்வு ரகசியம்

கதை விஷயத்தில் யோசித்து முடிவு செய்கிறேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “சினிமா துறையில் நிலைத்து இருப்பது எனது அதிர்ஷ்டம். எவ்வளவோ திறமையானவர்கள் இருக்கும்போது மகாநதி படத்தில் சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்ததை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும். கதையை புரிந்து கஷ்டப்பட்டு நடித்தேன். அதற்கான பலனையும் அனுபவித்தேன். என்னை பற்றி திரும்பி பார்க்கக்கூட நேரம் இல்லை. ஒரு படத்தில் நடித்து திரைக்கு வந்ததும் அதில் எப்படி நடித்து இருக்கிறேன். இதைவிட சிறப்பாக நடித்து இருக்கலாமோ என்றெல்லாம் யோசிப்பதற்கு கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கையில் வந்துகொண்டே இருக்கின்றன. கதை விஷயத்தில் மட்டும் யோசித்து…

குழந்தை பெற்றுக்கொள்ள பிரியங்கா சோப்ரா விருப்பம்

தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்றும் விரைவில் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. இதனை மறுத்த குடும்பத்தினர் இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வருவதாக தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்துவதுபோல் நிக்ஜோனாசுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை டுவிட்டரில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டார். திருமணம் ஆகி இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையே என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பிரியங்கா சோப்ரா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு…

விஷால் நடித்த அயோக்யா முழு படமும் இணையதளத்தில்

தமிழ் திரையுலகினருக்கு புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்கள் பெரிய தலைவலியாக உள்ளன. படங்கள் திரைக்கு வந்த சிலமணி நேரத்திலேயே இணையதளங்களிலும் வெளியாகி விடுகின்றன. இதனால் வசூல் பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை திரைக்கு வந்த உடனேயே இணையதளங்களில் பார்க்க முடிந்தது. இதை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும் பலன் இல்லை. சமீபத்தில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணே கலைமானே, எல்.கே.ஜி. உள்பட அனைத்து படங்களும் இணையதளங்களில் வெளியானது. தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து 2-ம் பாகமாக தயாராகி வெளியான என்.டி.ஆர் மகாநாயுடு படமும் இணையதளத்தில் வெளிவந்தது. 2 வாரத்துக்கு முன்பு திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தையும் இணையதளத்தில்…

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களின் பின்னால்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடாத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த இரு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டி நகருக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட அமைச்சர்களான கபீர் ஹாசிம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர்களான பைசால் காசிம், அலி சாஹிர் மௌலானா மற்றும் ஜெ.சி. அலவத்துவல ஆகியோர் இன்று (14) நேரில் சென்று…

உலகப்புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள் தொடரும் பயணம்

ரியூப் தமிழ் இலங்கை பணியகத்தால் உலகப்புகழ் பெற்ற உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூலை பாடசாலைகளுக்கு வழங்கும் பணி தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. பாடசாலைகள் மறுபடியும் திறக்கப்பட்டுள்ளதால் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கடந்த 10ம் திகதி கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் 13ம் திகதி மானிப்பாய் இந்துக்கல்லூரியும் வழங்கப்பட்டன. வாசிக்கப்பட வேண்டிய விடயங்களை வாசிக்கப்படக்கூடிய விதமாக எழுதி வழங்கும் படைப்புக்களை மாணவரிடையே சேர்க்கவும், அவர்களுடைய சிந்தனையை சர்வதேச அளவில் வளர்க்கவும் ஆவல் கொண்டு இந்த நூல்கள் வழங்கப்படுகின்றன. டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற இந்த நூல் மாணவர்களால் மிகவும் விரும்பி வாசிக்கப்படுவதாக பல பாடசாலைகள் தகவல் தருகின்றன. அகில இலங்கையையும் குறிவைத்து ஆரம்பிக்கப்பட்ட இப்பணி தற்போதைய ஊரடங்கு சட்டங்கள் காரணமாக இடையில் சிறு தடங்கல்களை சந்திக்க நேர்ந்து, இப்போது மீண்டும் பழைய உற்சாகத்துடன்…