பள்ளிவாசல்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

பிங்கிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணியாம பகுதியில் ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட சில பள்ளிவாசல்கள் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் குறித்த பள்ளிவாசல்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளது.

இதையடுத்து மேற்படி பகுதியில் இன்று காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெல்லவாய பொலிஸ் பிரிவிக்குட்பட்ட குடா ஓயா பகுதியில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 2 ரிப்பிட்டர் ரீபில் துப்பாக்கிகள், 2 சொட்கன், ரி 56 ரக துப்பாக்கிகளுக்கான 342 ரவைகள் ஆகிய வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts