எமி பாணியில் மற்றொரு ஹீரோயின் கர்ப்பம்

நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் நெருக்கமாக போஸ் கொடுத்த படங்கள் நெட்டில் வலம் வருகிறது. இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்களா? என்று கேட்டால், இல்லையே என்று இருவரும் உதட்டை பிதுக்குகின்றனர். நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்துகொண்டபோது அவர்களை ஜோடி சேர்த்து புகைப்படக்காரர்கள் எடுத்த குறும்பு படங்கள்தான் இவை. அதைப் பார்த்த குறும்புக்கார ரசிகர்கள், ரெண்டு பேரும் லவ் பண்றீங்களா என்று கமென்ட் வீச, லவ்வெல்லாம் பண்ணல, இது தோழிகளின் சங்கமம் என்று பதில் அளித்திருக்கின்றனர்.

தமன்னாவும், காஜலும் ஒரே படத்தின் கதையில் வெவ்வேறு மொழிகளில் நடித்திருக்கின்றனர். கங்கனா ரனாவத் இந்தியில் நடித்த படம் குயின். இப்படம் தமிழில் காஜல் அகர்வால் நடிக்க “பாரீஸ் பாரீஸ்” பெயரிலும், “தட் ஈஸ் மகாலட்சுமி” பெயரில் தமன்னா நடிக்க தெலுங்கிலும் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

————

நடிப்புக்கு பை பை சொல்லிவிட்டு குழந்தை குட்டியுடன் செட்டிலாகி விட்டார் நடிகை அசின். தற்போது அதே சாயல் பெயருடன், ‘அந்த நிமிடம்’ படத்தில் அமெரிக்க நடிகை கோலிவுட்டில் என்டர் ஆகியிருக்கிறார். அவரிடம், உங்க பெயர் அசினா என்ற போது இல்லை என் பெயர் நொஷின் என்றார். அந்த நிமிடம் படத்தில் நொஷினை ஹீரோயினாக அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் ஆர்.குழந்தை ஏசு. இவர் எஸ்.பி.முத்துராமன், கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மஞ்சுளா டி சில்வாவுடன் இணைந்து படத்தையும் தயாரிக்கிறார் குழந்தை ஏசு.

புதுமுகம் ருத்ரா ஹீரோ. சிங்கள நடிகர் லால் வீரசிங்கே வில்லன். பெண்களின் பாதுகாப்புபற்றி பேசும் இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியிருக்கிறது. தங்கையா மாடசாமி ஒளிப்பதிவு. எஸ்.என்.அருணகிரி இசை. சென்னை, பொள்ளாச்சி, இலங்கையில் நூரேலியா, ராமர் சீதா கோவில், ராவணக் கோட்டம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் ஆடியோ, டிரெய்லர் வெளியிடப்பட்டது.

———–

தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் ஒருவரை, ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் ரகசிய காதல் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து அலறிய அவர் தனது டிவிட்டரில் விளக்கம் சொல்லி இருக்கிறார். ‘நான் யாரையோ காதலிப்பதாக வரும் வதந்திகள் குறித்து கேள்விப்பட்டேன். என் காதலன் யார் என்று எனக்கும் சொன்னால் நன்றாக இருக்கும். அவர் யார் என்று தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவதை தயவுசெய்து நிறுத்துங்கள். கல்யாணம் போல் ஏதாவது மங்களகரமான நிகழ்ச்சி எனக்கு நடந்தால், அதை ரசிகர்களுக்கு வெளிப்படையாக சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். எனவே, உண்மை இல்லாத தகவல்களை பரப்ப வேண்டாம். இப்போது நான் தனியாகவும், அதிக மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

————

ஷங்கரின் 2.0 படத்தில் நடித்த பிறகு பட வாய்ப்புக்காக காத்திருந்த எமி ஜாக்ஸனுக்கு எதுவும் கைகூடாத நிலையில் தனது பாய்பிரண்ட் ஜார்ஜ் பனயியோட்டாவுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். அப்போதே அவர் கர்ப்பமாக இருந்தார். திருமணத்துக்கு முன்னதாக அவர் குழந்தை பெற முடிவு செய்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது. தற்போது எமி பாணியில் மற்றொரு நடிகை திருமணத்துக்கு முன் கர்ப்பமாகியிருக்கிறார்.

தமிழில் அஜீத்தின் ‘பில்லா 2’ படத்தில் நடித்தவர் புருனா அப்துல்லா. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த இவர் சுற்றுலாவிற்காக இந்தியா வந்தார். அப்போது நடிகை ஆனார். ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், கிரான்ட்மஸ்தி, ஜெய் ஹோ, உடன்சோ போன்ற இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். புருனாவுக்கும் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமண தேதி முடிவாகவில்லை.

அதேசமயம் எமியை போலவே புருனாவும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புருனா வெளியிட்டிருப்பதுடன் இன்னும் 5 மாதங்களில் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். திருமணத்தில் நம்பிக்கையில்லாத ஒரு சில மாடர்ன் நடிகைகள்போல் புருனாவும் திருமணத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லாதவர். இதுபற்றி அவர் அளித்த பதில் ஒன்றில்,’திருமணச் சான்றிதழ் என்பது ஒரு பேப்பர்தானே தவிர வேறொன்றும் இல்லை’ எனக் குறிப்பிட்டார்.

Related posts