பொன்னியாவது செல்வனாவது லைகா ஓட்டம் ! சினிமா செய்திகள் !

சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராஃப் படம் திரைக்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. இதன் 2ம் பாகம் எப்போது உருவாகும் என்று, சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகர் கேட்டார். அதற்கு பதிலளித்த சேரன், ‘எல்லோருடைய கேள்வியும் இதுதான். எனக்கும் அதன் 2ம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வரும்’ என்றார். தற்போது சேரன், ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்து வருகிறார். --------------- பொன்னியின் செல்வன் கதையை படமாக்க மணிரத்னம் முயன்று வருகிறார். இதற்கான வேலைகளிலும் அவரது டீம் மும்முரமாக ஈடுபட்டு வந்தது. இதில் அமிதாப் பச்சன், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மோகன்பாபு உள்பட பலர் நடிக்க பேச்சுவார்த்தையும் நடந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் படத்தை தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் இந்த படத்திலிருந்து விலகியதாக தெரிகிறது. இதனால் படத்துக்கு…

யாழ்.பல்கலை மாணவர்கள் திங்கள் விடுவிக்கப்படலாம்

கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ,செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை நடத்துனர் ஆகியோரை விடுவிக்க பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி செயலாளர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இரமநாதனின் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்ன மற்றும் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ், யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கலந்துரையாடலில் இணைந்திருந்தனர். ஜனாதிபதியினால், ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய வருகின்ற திங்கட்கிழமை…

முஸ்லிம்களின் அச்சத்தைப் போக்குவதே அவசரத்தேவை

நாட்டில் அண்மையில் நடந்த துரதிஷ்ட சம்பவங்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்கள் தாம் மேலும் துருவப்படுத்தப்பட்டுள்ளதாக உணர்கின்றனர். அவர்களது அச்சத்தை போக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதே இன்றைய அவசர தேவையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அலய்னா பீ. ரெப்லிட்ஸ் இன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து அண்மைய தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும், ஏனைய முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார் இச்சந்திப்பின் போது அமெரிக்க தூதரகத்தின் அரசியல் அதிகாரி ஜொஅன்னா எச். பிரிட்செட்டும் சமூகமளித்திருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. பயணிகளின் பொதிகளை பரிசோதனை செய்வதற்காக புதிய ஸ்கேனர் (Scanner) இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக ஏற்படக்கூடிய தாமதத்தை தவிர்த்துக் கொள்வதற்காக விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணித்தியலாத்திற்கு முன்னதாக பயணிகள் விமான நிலையத்தை வந்தடைய வேண்டும். இதே போன்று பயணிகள் செல்லும் பொழுதும் விமான நிலையத்திற்கு வரும் பொழுதும் அவர்களது உறவினர்கள் நண்பர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளன. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட்டிருப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்தள்ளது. தற்பொழுது புதிய பாதுகாப்பு விதிமுறைகள் விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் பயணிகளும் பொது மக்களும் சிரமங்களுக்கு உள்ளாகாத வகையில் வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 19

எக்காலத்திலும் சந்தோசம்தரும் தேவனைச் சார்ந்துகொள்ளுவோம். சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப் படுவார்களாக. சங்கீதம் 40:16. இன்றைய இலங்கையின் நிலையை சற்று சிந்தித்துப்பார்ப்போம். அமைதியுடன் வாழ்ந்த நாட்கள், குடும்பஉறவுகள் நிகழ்வுகள், வாழ்வின் முற்னேற்றத்திற்கான வழிகள், கல்வித்தரத்தின் உயர்வு இப்படிப் பலநிகழ்வுகள். ஆனால் இன்று எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. வேதனை வேதனை. வேதப்புத்தகத்தின் பழையஏற்பாட்டை நாம் வாசித்துப் பார்த்தால், எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர் முதல் தடவையாக தம்மை மறந்து சந்தோசமாக இருந்தது சீனாய் மலையடிவாரத்தில் என்று காணலாம். அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை கிடைத்தாலும், எகிப்தியர் பின்தொடருவார்களோ என்ற பயம் இருந்தது. சிவந்த சமுத்திரத்தை கடந்தபோதும் என்ன நடக்குமோ என்ற பயம் இருந்தது. மன்னாவை சாப்பிட்டு, கன்மலையின் தண்ணீரை அருந்தியபிற்பாடு மனப்பெலன்…

மட்டு.ஷரீஆ பல்கலைக்கழகம்; பின்னணியில் இருப்பது என்ன?

மட்டக்களப்பு ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தீர்த்து உரிய முறைமைகளை முன்னெடுக்க வேண்டுமென நீர்ப்பாசன மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு மற்றும் ஊடக அமைச்சர் ருவன் விஜேவர்தன கூறினார். வாய்மூல விடைக்காக ஹேசா விதாரண எம்.பி எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளிக்கையிலே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர். இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பிய ஹேசா விதாரண எம்.பி,ஷரீஆ பல்கலைக்கழகத்தின் 500 மில்லியன் ரூபா பங்குகள் கிழக்கு ஆளுநரின் மகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஒருவரின் மகன் இவ்வாறு பங்குகள் வைத்திருப்பது பாதகமானது. அரசியல்வாதிகளுக்கு தேவையானவாறு சட்டங்களை மாற்ற முடியுமா? இந்தத் திட்டத்தை மக்கள் நிராகரிக்கிறார்கள். இந்தத் திட்டம் குறித்து விசாரணை நடத்தப்படுமா? என வினவினார். இதற்குப்…

கேர்னிங் நகரில நேற்றிரவு இரண்டு இளைஞர்கள் மரணம் 17, 18 வயது

டென்மார்க் கேர்னிங் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள லைலிகில் எனப்படும் தொடர்மாடி கட்டிடத்தில் உள்ள வீடொன்றில் இரண்டு இளைஞர்கள் இறந்தபடி கண்டெடுக்கப்பட்டுள்ளனர். நேற்று வியாழன் இரவு 21.36 மணியளவில் இவர்களின் நண்பர்கள் செய்த போனைத் தொடர்ந்து போலீஸ் ஸ்தலத்திற்கு விரைந்துள்ளது. இந்த இளைஞர்கள் உணர்வற்று கிடந்ததாகவும் அதனால் அச்சமடைந்து போன் செய்ததாகவும் நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். இவர்கள் போதை வஸ்த்தை உண்டுள்ளதாகவும் அது அளவு கூடிவிட்டதாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தாமே போதை வஸ்தை எடுத்துள்ளதாகவும் செய்தி கூறுகிறது. எத்தகைய போதை வஸ்த்தை எடுத்தார்கள், எவ்வளவு எடுத்தார்கள், அது என்ன போதை வஸ்த்து, எங்கிருந்து வந்தது.. ஏன் இப்படி செய்தார்கள்.. இவர்களின் பின்னணி என்ன.. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. அலைகள் 10.05.2019