ஜனாதிபதிக்கு தெரியும் ஆனால் அவர் காது கொடுக்கவில்லை சரத்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டில் புலனாய்வு பிரிவை முன்னெடுத்து சென்ற முறையினை மீண்டும் கொண்டு வர வேண்டும் என தெற்காசிய மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
———–

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிணை விண்ணப்பம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பான விடயங்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் ஆராயப்பட்டு வருவதனால் நீதிமன்றால் பிணை வழங்கும் கட்டளையை வழங்க முடியாது என்று நீதிவான் ஏ.எஸ்.பி போல் கட்டளையிட்டார்.

வழக்கில் மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் முன்வைத்த தவறுகள் தொடர்பில் வியாக்கியானமளித்த நீதிவான், அவற்றில் சிலவற்றை திருத்த முடியும் எனக் கட்டளையிட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த வழக்கை நகர்த்தல் பத்திரம் அனைத்தும் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் சமர்ப்பணம் செய்தனர்.

மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது இன்று கட்டளை வழங்குவதாக மன்று தவணையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
———-

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வெல்லப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 9 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க காரணமாக பொலிஸாரால் தவறு இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பிலேயே விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவால் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

…………

தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பதற்காக, ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் ​கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில், ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்தால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரொருவரை விடுவிப்பதற்கு 5 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக வழங்குவதற்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலையில், முதற் கட்டமாக இரண்டரை இலட்சம் ரூபாயை இன்று (08) காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு வழங்க முற்பட்ட வேளையில் ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உத்தியோகபூர்வ அறையில் வைத்து இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளை அடுத்து சந்தேக நபரை அநுராதபுர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த சந்திரசிறி தெரிவித்தார்.

————-

எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

அத்துடன் பயங்கரவாதிகளில் 150 பேரில் 50 பேர்வரை கைதுசெய்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அப்படியாயின் இன்னும் 100 பயங்கரவாதிகள் இருக்கின்றனர். இது மிகவும் எச்சரிக்கையான நிலையாகும். உளவுத்துறை பலவீனமடைந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சிலர் விமர்சித்து வந்ததனர். உளவுத்துறையில் சிலர் நீக்கப்படுவதன் மூலம் உளவுத்துறை பலவீனமடையவில்லை. மாறாக உளவுத்துறையை தொழிநுட்ப ரீதியில் பலப்படுத்தவில்லை.

மேலும் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பதவி விலகியமையை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பாதுகாப்பு செயலாளர் எனக்கு நன்கு தெரிந்தவர்.பாதுகாப்பு செயலாளர் என்றவகையில் தாக்குதல் தொடர்பாக தகவல் கிடைத்ததை நான் ஜனாதிபதிக்கு தெரிவிக்காமல் இருப்பேனா என்று அவர் என்னிடம் தெரிவித்தார். அதேபோன்று தாக்குதல் எச்சரிக்கை இருப்பது தொடர்பாக பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் 15 தடவைக்கும் மேல் ஜனாதிபதிக்கு தெரிவித்ததாகவும் அப்போதெல்லாம் ஜனாதிபதி கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே நான் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன். அந்த சட்டத்தில் குறைகள் இருக்கின்றமையாலே அந்த சட்டத்துக்கு கீழ் என்னை கைதுசெய்து சிறையில் அடைக்க முடியுமாகியது. அதனால் தற்போதுள்ள நிலையில் அரசியல் லாபம் நோக்கில் செயற்படாமல் நாடுதொடர்பாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே இந்த பிரச்சினையில் இருந்து மீள முடியும் என்றார்.

Related posts