தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் முதலமைசசரை மாற்றக்கோரி தான் 18 எம்.எல்.ஏ.க்களும் ஆளுநரிடம் மனு கொடுத்தார்களே தவிர, ஆட்சியை கலைப்பதற்காக அல்ல என்று தெரிவித்தார். ஜெயலலிதா இறந்த தகவல் முறையாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே முதலமைச்சராக பொறுப்பேற்றவர் ஓ.பன்னீர்செல்வம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பிரதமராக மோடி இருந்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியால் நீடிக்க முடியும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத்தருவது தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி ஆணையத்திற்கு இதுவரை 6 முறை நீட்டிப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். மே 23 ம் தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழப்போவது உறுதி என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சிப்பதாக தெரிவித்த ஸ்டாலின், 6 முறை சம்மன் அனுப்பியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மலைக்கோவிலூர் பகுதியில் புதிய தொழிற்சாலை கொண்டுவரப்படும், முருங்கை ஏற்றுமதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். தேரைப்பாடி அருகே குடகனாறு குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்படும் என்று பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க மாநில சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி ஒருவரை நியமிக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். கோவையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

20 ஒப்புகைசீட்டு இயந்திரங்கள் கோவையில் இருந்து ஈரோடு தொகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கோவையில் இருந்து 50 வாக்கு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவே வராத நிலையில் ரகசியமாக தேனிக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு சென்றது ஏன்? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts