தேசிய கராத்தே போட்டியில் நடிகர் சூர்யா மகன் சாதனை

சூர்யா-ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படிக்கிறார்கள்.

பிரபலங்களின் குழந்தைகள் படங்களில் தலைகாட்டுகின்றனர். ஆனால் சூர்யாவின் குழந்தைகள் இதுவரை சினிமா பக்கம் வரவில்லை. பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் இரு குழந்தைகளும் பங்கேற்று வருகிறார்கள்.

தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற தகவல் வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. தற்போது டெல்லியில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேவ் வெற்றி பெற்றுள்ளார்.

40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தேவுக்கு தண்டர் கேக் பிரிவில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியை காண சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்று இருந்தார்கள். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி தேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சூர்யா தற்போது என்.ஜி.கே. படத்தை முடித்துவிட்டு, காப்பான், சூரனை போற்று ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகாவும் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி உள்ளது. இதில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

Related posts