அலைகள் வாராந்தப் பழமொழிகள் 01.05.2019

01. சாக்கு போக்கு சொல்வதால் மனிதர்கள் தோல்வியடைகிறார்கள். உடல் நலம் சரியில்லை, வயது, அறிவு, அதிர்ஷ்டம் போன்ற தலைப்புக்களில் இதை அவிழ்த்து விடுகிறார்கள். அப்படி எதுவும் கிடையாது.. நமது மனம்தான் அதை உருவாக்குகிறது. 02. ஒரு நபர் தான் செய்ய விரும்புவதை செய்ய தவறுவதற்கும், பொறுப்புக்களை ஏற்கத்தவறுவதற்கும், வெற்றிபெற தவறுவதற்கும் உடல் நலம் சரியில்லை என்ற சாக்குப்போக்கு ஓராயிரம் தடவைகள் பயன்படுத்தப்படுகிறது. 03. உங்களுக்கு தெரிந்த வெற்றிகரமான மனிதர்களை கூர்ந்து பாருங்கள். உடல் நலக்குறைவை அவர்கள் ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தியிருக்கமாட்டார்கள் என்பதை கண்டறிவீர்கள். 04. கச்சிதமான உடலைக்கொண்ட ஒருவர் கூட இந்த பூமியில் இல்லை என்று கூறப்படுகிறது. எல்லோருடைய உடலிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும் ஆனால் அதற்காக அதை சாக்கு போக்காக கூறக்கூடாது. 05. நீங்கள் ஒரு நோய் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால்…

சிவகார்த்திகேயன் கைதாகலாம் தேர்தல் வாக்களிப்பு தவறு

தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தமிழகத்தில் கடந்த 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது நடிகர் சிவகார்த்திகேயன் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட சாலிகிராமம் வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக மனைவியுடன் சென்று இருந்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் அவரது மனைவி பெயர் இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் இல்லை. அதன்பிறகு வளசரவாக்கம் வாக்குச்சாவடிக்கு சென்று சிவகார்த்திகேயன் ஓட்டுப்போட்டதாக கூறப்பட்டது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறும்போது, “சிவகார்த்திகேயன் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே ஓட்டு போட்டு இருக்கிறார். அவரை எப்படி ஓட்டுபோட அனுமதித்தார்கள் என்று விளக்கம் கேட்டு இருக்கிறோம். இதில் தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன்…

அண்ணியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி” -நடிகர் கார்த்தி

தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தியும், ஜோதிகாவும் புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இதில் இருவரும் அக்காள் தம்பியாக வருகிறார்கள். தனது அண்ணன் சூர்யாவின் மனைவியான ஜோதிகாவுடன் கார்த்தி முதல் தடவையாக சேர்ந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தை ஜோதிகாவின் தம்பி சூரஜ் தயாரிக்கிறார். ஜித்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இவர் மலையாளத்தில் திரிஷ்யம் என்ற திகில் படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர். இந்த படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல்ஹாசன் நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தயாரானது. கார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு 45 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துகின்றனர். படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.…

தேசிய கராத்தே போட்டியில் நடிகர் சூர்யா மகன் சாதனை

சூர்யா-ஜோதிகாவுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பள்ளியில் படிக்கிறார்கள். பிரபலங்களின் குழந்தைகள் படங்களில் தலைகாட்டுகின்றனர். ஆனால் சூர்யாவின் குழந்தைகள் இதுவரை சினிமா பக்கம் வரவில்லை. பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் இரு குழந்தைகளும் பங்கேற்று வருகிறார்கள். தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற தகவல் வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்தியது. தற்போது டெல்லியில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேவ் வெற்றி பெற்றுள்ளார். 40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தேவுக்கு தண்டர் கேக் பிரிவில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியை காண சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்று இருந்தார்கள். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி தேவுக்கு வாழ்த்து தெரிவித்து…

நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

நடிகர் அஜீத்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி, அவருக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். #AjithKumar #OPanneerselvam #HappyBirthdayThala மே 1-ம் தேதியான இன்று நடிகர் அஜித்குமார் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும், சமூக வலைதளங்களில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது அயராத உழைப்பினாலும், தன்னம்பிக்கையாலும் முன்னேறி திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்து ரசிகர்களின் பேரன்பை பெற்றவர் என்றும் நடிகர் அஜித்குமாருக்கு தமது பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ஹெச்பிடி அஜித்குமார் என்ற ஹேஷ் டேக்கையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இது போல் பல சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து…

முஸ்லீம்கள் எல்லாம் ஐ.எஸ் அல்ல.. ஐ.எஸ் என்றால் என்ன..? காணொளி..!

ஐ.எஸ். அமைப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு ஆலோசகராக இருந்த இத்தாலிய பயங்கரவாத நிபுணர் லொறேற்றா நாப்போலியானி எழுதிய இஸ்லாமிக் ஸ்ரேற் என்ற நூலின் சிறப்பு விபரம்.. அலைகள்..01.05.2019

மே தினத்தை முன்னிட்டு ரணில் விடுததுள்ள செய்தி

வேலை செய்யும் மக்களின் தினமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ள மே தினம் இம்முறை நாட்டுக்காக வியர்வை சிந்தி, உழைத்த அப்பாவி மக்கள் கொடிய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்து, காயமடைந்துள்ள சோகமானதொரு சந்தர்ப்பத்திலேயே எம்மை அடைந்துள்ளது. அத்துடன் இது நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், அதன் இருப்பு என்பன பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள முக்கிய சந்தர்ப்பமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள மே தின செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, முன்னர் காணப்பட்ட சமூக, அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொண்டு, அமைதியான சூழலொன்றில் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி அடியெடுத்து வைத்த எமது நாடு இந்த திடீர் தாக்குதல்கள் காரணமாக எதிர்கொண்ட தாக்கம் மிகவும் பாரியது. நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே இத்தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவானது. தொழிலாளர் உழைப்பின் உண்மையான…