படுக்கைக்கு அழைப்பு நடிப்புக்கு குட்பை

பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ரிச்சா பஹத்ரா. அவர் சினிமாவிலிருந்து தன்னை ஓட்டம்பிடிக்க வைத்த விஷயத்தை பகிர்ந்தார்.

‘குழந்தை நட்சத்திரமாக நான் சினிமாவில் அறிமுகமானேன். வளர்ந்த பின் நடிக்க வாய்ப்பு கேட்டபோது, காஸ்டிங் கவுச் என்னை படுக்கைக்கு அழைத்தார்.

திருமணம் செய்யாமலிருந்தால்தானே இப்படி கேட்கிறார்கள் என்று திருமணம் செய்துகொண்டேன். அதன்பிறகு பட வாய்ப்பு கேட்டபோது,’என்னை எப்போதும் சந்தோஷமாக வைத்துக்கொண்டால் உனக்கு தொடர்ந்து வேலை தருகிறேன் என்றனர்.

என்னை சந்திக்க அழைத்த காஸ்டிங் கவுச்சிடம், காபி ஷாப் வருகிறேன் என்றேன். இல்லை, ஓட்டலுக்கு வா என்றார். இதனால் நடிப்பின் மீதிருந்த எண்ணமே எனக்கு போய்விட்டது.

அத்துடன் சினிமா நடிப்புக்கு எண்டு கார்டு போட்டுவிட்டேன்.

குழந்தை நட்சத்திரமாக எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது. அதை கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்றார்.

Related posts