சூப்பர் சிங்கர் யூனியர் சின்மய்க்கு வெற்றி தராமல் போனது

பொதுவாக சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் புலம் பெயர் தமிழர் ஒருவர் சிறப்பாக தமிழர் அதிகமாக இருக்கும் கனடாவிலிருந்து பங்கேற்பதும் அந்தச் சிறுமி இறுதி சுற்றுக்கு பலத்த போராட்டத்தில் வருவது போல காட்சிகள் இருக்கும்.

பின் அவர் ஈழத்திற்கு அனுப்பப்படுவார், உறவினரை பார்க்க. போர் முடிந்ததது 2009 ல் என்ற செய்தி தெரியாமல் இப்போதும் போர் நடக்கும் இடத்திற்கு விஜய் ரீவி உயிரை கையில் பிடித்து போனதாக கதைவிட்டது.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்று ஆரம்பித்தது. ஆனால் இந்தத் தடவை புலம் பெயர் தமிழருக்கும் மூளை திறந்ததோ என்னவோ பலர் அதில் சன்னத ஆட்டம் ஆடாமல் அடங்கியிருந்ததும் சுவாரஸ்யமாக இருந்தது.

அவர்களில் பலர் இலங்கை சென்று திரும்பியிருப்பது தெரியாமல் விஜய் டி.வி ஆடிய நாடகம் சப்பென்று போய்விட்டது.

பின் கனடா போட்டியாளர் ஈழப்பாட்டொன்று பாடி தோல்வி நிலையென நினைத்தால் என்று கண்ணீர்விட வாக்குகள் குவிய வேண்டும்.

பிறகு பரிசு பெற்றதும் அதை பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்க வேண்டும்..

இப்படியொரு வேலை இம்முறையும் ஆரம்பித்தது, ஆனால் புலம் பெயர் தமிழர் விழித்துவிட்டார்கள் போலும் சன்னதம் கிளம்பவில்லை, சின்மய் தோற்றுவிட்டார்.

ஒருரே இருந்து ஒரு மில்லியன் வாக்குகளை போடும் நிகழ்ச்சித்திட்டம் இருப்பது தெரியாமல் பலர் கூத்தாடுவதும் இன்னொரு வேடிக்கை.

வாக்களிப்பு மட்டுமல்ல மத்தியஸ்தர்களுக்கும் 50 : 50 அதிகாரம் இருந்தும் சின்மய் தோற்றுவிட்டார்.

ஆனால் முதல் பரிசு சரியான தேர்வுதான்..
இரண்டாவது பரிசும் சரி என்று கூற முடியாவிட்டாலும் சூர்யா பரிசுக்குரியவரே..
ஈழத் தமிழருக்கு வரவேண்டிய சென்டிமன்ட் பரிசு இந்தத் தடவை பூவையாருக்கு போய்விட்டது.

இதற்குள் இன்னொரு வேடிக்கை..

ஓடும் பேருந்து வண்டியில் இரண்டுபேர் வேடிக்கையாக பேசினார்கள்..

விஜய் டி.வி வாக்குகளை கூட்டிப் பார்த்தால் உலக சனத்தொகையை விட அதிகாமாக இருக்கிறதே என்று..

அதற்கு மற்றர் அதுதான் ஒரு பாதுகாப்புக்காக ஒருவர் 50 வாக்குகள் போடலாம் என்கிறார்களோ என்னவோ என்றார்.

இது வேடிக்கை பேச்சானாலும் உண்மை இல்லாமல் இல்லை..

புலம் பெயர் தமிழர்.. ஈழ அழுகை.. செத்தவீட்டு பாடல்.. சென்டிமென்ட்.. புயலடித்த வீட்டு சென்டிமென்ட்.. தகப்பன் இறந்த சென்டிமென்ட்.. குடிசையில் வாழும் சென்டிமென்ட் என்று பாடிய பல்லவியை பாடாமல் இனிமேலாவது உண்மையை காட்சியாக தந்தால் பார்க்கக் கூடியதாக இருக்கும் என்று பலர் கூறுகிறார்கள்.

சூப்பர் சிங்கர் என்பது தொடர் நாடகமல்ல என்ற புரிதல் விஜய் டிவிக்கு வருமா என்பதும் ஒரு கேள்வி.

சின்மய் நன்றாக பாடினார் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவரை விட ஆற்றல் மிக்க அவருடைய தோழியையும் தோற்கடித்ததால் சின்மய் கவலைப்பட எதுவும் இல்லை.

வெற்றி தோல்வியால் எதுவும் வராது.. பரிசை வென்றுவிட்டு யாருக்கும் கொடுக்காமல் வந்தால் புலம் பெயர் தமிழர் பொங்கி எழுவர்.. அதைவிட தோற்றுப்போவது நல்லது.. என்றார் இன்னொருவர்..

இவை அனைத்தும் சேகரிக்கப்பட்ட கருத்துக்கள் மட்டுமே. யாரையும் துன்புறுத்த அல்ல..

போட்டியாளர் அனைவரும் நன்றாக பாடியது உண்மையே..

அலைகள் 24.04.2019

Related posts