சூப்பர் சிங்கர் யூனியர் சின்மய்க்கு வெற்றி தராமல் போனது

பொதுவாக சூப்பர் சிங்கர் பாடல் போட்டியில் புலம் பெயர் தமிழர் ஒருவர் சிறப்பாக தமிழர் அதிகமாக இருக்கும் கனடாவிலிருந்து பங்கேற்பதும் அந்தச் சிறுமி இறுதி சுற்றுக்கு பலத்த போராட்டத்தில் வருவது போல காட்சிகள் இருக்கும். பின் அவர் ஈழத்திற்கு அனுப்பப்படுவார், உறவினரை பார்க்க. போர் முடிந்ததது 2009 ல் என்ற செய்தி தெரியாமல் இப்போதும் போர் நடக்கும் இடத்திற்கு விஜய் ரீவி உயிரை கையில் பிடித்து போனதாக கதைவிட்டது. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்று ஆரம்பித்தது. ஆனால் இந்தத் தடவை புலம் பெயர் தமிழருக்கும் மூளை திறந்ததோ என்னவோ பலர் அதில் சன்னத ஆட்டம் ஆடாமல் அடங்கியிருந்ததும் சுவாரஸ்யமாக இருந்தது. அவர்களில் பலர் இலங்கை சென்று திரும்பியிருப்பது தெரியாமல் விஜய் டி.வி ஆடிய நாடகம் சப்பென்று போய்விட்டது. பின் கனடா போட்டியாளர் ஈழப்பாட்டொன்று பாடி தோல்வி…

விஜய்சேதுபதியுடன் ஜோடி சேரும் சுருதிஹாசன்

ஆரஞ்சு மிட்டாய்,’ ‘ஜுங்கா,’ ‘மேற்கு தொடர்ச்சி மலை’ ஆகிய படங்களை தயாரித்த விஜய்சேதுபதியின் சொந்த பட நிறுவனமான விஜய்சேதுபதி புரொடக்‌ஷனும், ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்,’ ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ஆகிய படங்களை தயாரித்த 7 சிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கின்றன. இந்த படத்துக்கு, ‘லாபம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ‘இயற்கை,’ ‘பேராண்மை,’ ‘ஈ,’ ‘புறம்போக்கு’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் டைரக்டு செய்கிறார். மிக பிரமாண்டமான முறையில் படம் தயாராகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு ராஜபாளையத்தில் தொடங்கியது. “அதிரடி சண்டை காட்சிகளும், அற்புதமான கதையம்சமும் கொண்ட படம்,…

கர்ப்பத்தால் பறிபோன எமி ஜாக்ஸன் வாய்ப்பு

ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்ஸன் அடுத்தடுத்த பட வாய்ப்பு களுக்காக காத்திருந்தார். அந்த நேரத்தில் இயக்குனர் ராஜமவுலி தான் இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் வெளிநாட்டு ஹீரோயின் நடிப்பது பற்றி விசாரித்துக்கொண்டிருந்தார். எமியின் பெயரும் அடிபட்டதால் அந்த தகவல் எமி காதுக்கு சென்றது. ராஜமவுலியிடமிருந்து அழைப்பு வரும் என காத்திருந்தவருக்கு கண்கள் பூத்துப்போனதுதான் மிச்சம். ராஜமவுலி தரப்பில் யாரும் கால்ஷீட் கேட்டு வரவில்லை... பொறுமை இழந்த எமி, தனது கோடீஸ்வர காதலன் ஜார்ஜ் பனயிட்டுவை திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக அறிவித்தார். அடுத்த சில வாரங்களில் தான் கர்ப்பம் ஆனதாகவும் அறிவித்தார். எமியின் நிச்சயதார்த்தம் மற்றும் கர்ப்பம் அறிவிப்பால் இயக்குனர் ராஜமவுலி தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்த கதாபாத்திரத்துக்கு வேறு வொரு வெளிநாட்டு நடிகையை ஒப்பந்தம் செய்தார். அவரும் மேக்அப் டெஸ்ட் எடுத்தபிறகு என்னால் முடியாது…

சோகத்தில் சின்னக்குயில்: வாழ்க்கையே வெறுமை

சின்னக்குயில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் பாடல்களை கேட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கி விடுகின்றனர். ஆனால் சித்ராவோ சோகமும் வெறுமையுமாக முகாரி ராகத்தில் காலத்தை கழித்து வருகிறார். 8 வருடங்களுக்கு முன் சித்ராவை கண்ணீரோடு தவிக்க விட்டு மறைந்தார் அவரது மகள் நந்தனா. மகளின் நினைவுநாளில் சித்ரா ஒரு கடிதம்எழுதி நெட்டில் பகிர்ந்தார். ‘பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாட்கள் பறந்துவிட்டன. ஆனால் ஞாபகங்கள் இன்னும் நினைவில் பொறிக்கப்பட்டுள்ளன. என் வாழ்க்கை வெறுமையும், சோகமுமாக மாறிவிட்டது. உன்னை இழந்து வாடுகிறேன் நந்தனா’ என குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சித்ரா. அவரது கடித்தை படித்தவர்கள் கண்ணீர் மொட்டுக்களை உதிர்க்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சித்ரா தனது குழந்தை நந்தனாவுடன் துபாய் சென்றார். அங்குள்ள அறையில் தங்கியிருந்தபோது நந்தனா நீச்சல்…

இராணுவ பாதுகாப்பு செயலர்களை இராஜினாமா செய்ய மைத்திரி உத்தரவு

இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் நேற்று வரை 310 பேர் உயரிழந்திருந்த நிலையில், தற்போது பல எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், சொகுசு உணவகங்களில் நடந்த இந்த தாக்குதலில் 45 குழந்தைகள் உட்பட பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இயக்கம் காரணம் என இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்த குண்டு…

9 தற்கொலைதாரிகளில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

உயிர்த்த ஞாயிறன்று (21) நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகள் தொடர்பில் 60 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 9 தற்கொலைதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார். ---------------- கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக தடை செய்ய வேண்டுமெனவும் இந்த கயவர் கூட்டத்தை கூட்டத்தை பூண்டோடு அழித்தொழிக்க வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றில் கோரிக்கை விடுத்தார். இன்று…

தற்கொலைக் தாக்குதல் 8 பேரில் ஒருவர் பெண்.. இன்னொருவர் இங்கிலாந்து

சிறீலங்காவில் தாக்குதலை நடத்திய தற்கொலைக்குண்டுதாரிகள் எட்டுப்பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் பெண் என்பது அதிர்ச்சி..! இன்னொருவர் இங்கிலாந்து அவுஸ்திரேலியா நாடுகளில் படித்தவர்.. அலைகள் 24.04.2019