அலைகள் வாராந்தப் பழமொழிகள் 20.04.2019

01. தலைமைப்பதவி வேண்டுமா.. அதற்கு சுய வளர்ச்சிக்கான ஒரு தெளிவான பயிற்சித்திட்டம் உங்களிடம் இருக்க வேண்டும். தேக்கமடைந்து நிற்பதும், முன்னேறுவதும் உங்கள் சுய விருப்பம். நேரத்தை செலவிடவும், தியாகம் புரியவும் நீங்கள் தயாராக இல்லாவிட்டால் தேங்கி நிற்பதை தவிர்க்க முடியாது. 02. முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள் உள்ளன.. 01. என்ன செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் வேண்டும் 02. அதை எப்படி செய்ய வேண்டும் என்ற வழி முறை இருக்க வேண்டும் 03. அது விளைவுகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். 03. நீங்கள் அப்படி செயற்பட்டால் உங்கள் குடும்பம் உங்களை மதிக்கும், நண்பர்கள் உங்களை கண்டு பிரமிப்பர், மற்றவர்களுக்கு பயனுள்ளவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற மன நிறைவு ஏற்படும். நீங்கள் ஓர் அந்தஸ்த்தை பெற்றிருப்பதைப் போல உணர்வீர்கள். வருமானமும் கூடும். 04. உங்கள் வெற்றிக்கான பயிற்சியை நீங்கள்தான்…

றொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கை எழுத்து வடிவத்தில்..

றொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கை அதிபரை வீழ்த்துமா..? 2016 நவம்பர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஸ்யாவின் தொடர்பு குறித்த றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷன் அறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்தது. முதலில் நான்கு பக்க ரெய்லர் விட்ட நீதியமைச்சர் வில்லியம் பார் இப்போது 448 பக்கங்கள் கொண்ட அடுத்த ரெய்லரை வெளியிட்டுள்ளர். இந்த அறிக்கை அமெரிக்க அரசியல் களத்திலும் மக்கள் மன்றத்திலும் ஊடகங்களிலும் இப்போது புயலாக வீச ஆரம்பித்துள்ளது. நீதி அமைச்சுர் வில்லியம் பார் வெளியிட்ட அறிக்கையானது றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷனின் முழுமையான அறிக்கையல்ல. அதிபரை காப்பாற்ற வசதியான வகையில் சென்சார் செய்யப்பட்ட ஓர் அறிக்கை மட்டுமே. இந்த அறிக்கையில் உள்ள அமெரிக்க அதிபருக்கு வாய்ப்பான பக்கங்கள் எவை ? ஒன்று அமெரிக்க அதிபர், றீஸ்ராட் எனப்படும் விசாரணையை சந்திக்க வேண்டியதில்லை.…

வல்வை மகளிர் மகாவித்தியாலயத்திற்கு ஆறு கணினிகள் அன்பளிப்பு : அவுஸ்திரேலியா

வல்வை மகளிர் மகாவித்தியாலயம் இணைய கட்டமைவு கொண்ட நவீன வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததே. புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் வல்வை மக்களின் ஆதரவுடன் இந்த வகுப்பறையை அமைக்கலாம் என்று சென்ற ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது. அதற்கமைவாக அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்கம் கூடுதல் கவனமெடுத்து தனது உதவிகளை வழங்கியுள்ளது. முதலில் இரண்டு இலட்சம் ரூபா பணமும் இப்போது அவுஸ்திரேலியாவில் வாழும் திரு. ரவீந்திரன் அவர்கள் மகளிருக்கு ஆறு ஆப்பிள் கணினிகளை வழங்கியிருக்கிறார். இதற்கான வைபவம் மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. திரு. கா. பிறேமதாஸ், ரவிச்சந்திரன் அவுஸ்திரேலியா ஆகியோர் அதிபரிடம் இவைகளை கையளித்தார்கள். அவுஸ்திரேலியா என்.எஸ்.டபிள்யூ பல்கலைக்கழகம் இக்கணினிகளை அன்பளிப்பாக வழங்கியது. திரு. ரவீந்திரன் அங்கு பணியாற்றுவதால் இக்கணினிகளை வல்வை மகளிருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை மிகவும் ஆறுதல்…

ஈழத் தமிழினம் பலம் குன்றிவிடவில்லை என்பதை காட்டும் வல்வை இந்திர விழா..!

வல்வை முத்துமாரியம்மன் இந்திரவிழா வட மகாணத்தில் ஒரு பெயர் பெற்ற விழாவாக தன்னை நிலை நிறுத்திவிட்டது. இதனுடைய வளர்ச்சி கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில் சீரான நகர்வாக இருக்கிறது. ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக இந்திரவிழா என்ற நிகழ்வில் கண்ட அடிப்படைகள் பல அப்படியே உள்ளன உதாரணம் புகைக்குண்டு விடுதலை கூறலாம். மற்றையது வீதிகள் தோறும் வாழைக்குலைகள் கட்டி, போட்டிக்கோ கட்டி அலங்காரம் செய்யும் பண்பும் மாறாமலே இருக்கிறது. இந்த விழா பழமையை போற்றும் பண்பு நிறைந்தாக இருக்கிறது, அதே வேளை புதுமைகளையும் இணைத்து முன்னேறுவதைக் காண முடிகிறது. முன்னர் நெடியாடு இளைஞர்கள் முன்னெடுத்த இந்த நிகழ்வில் மற்றைய இடங்களில் முக்கியமாக நிறைகுடங்கள் வைத்து வரவேற்கும் பாரம்பரியம் இருந்தது. ஆனால் இப்போதோ அன்று நிறைகுடம் வைத்த ஒவ்வொரு ஒழுங்கையும் தனியான நிகழ்வாக அதை ஜோடனை செய்ய ஆரம்பித்துள்ளன, இந்த…