விக்னேஸ்வரன் தகுதியானவர் அல்ல? வரதராஜ பெருமாள்

வடக்கு மாகாண சபையை ஊடாக எதையும் செய்யாது கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கு தகுதியானவர் அல்லர் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தெரிவித்தார். யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு தெரிவித்தது, வடக்கு மாகாண சபையின் ஆட்சியில் இருந்த போது முதலமைச்சராக இருந்த நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கற்பனை அரசியலை செய்து கொண்டு தாம் மாற்றுத் தலைமை என்கின்றார். அதிகாரத்தில் இருக்கும் போது அக்கபூர்ர்வமாக எதையும் செய்யவதவர் கட்சி தொடக்கி மக்களுக்கு என்னத்தை செய்யப்போகின்றார். புதிய கட்சி, கூட்டணி என்ற பெயரில் அரசியல் இலாபம் காணவே தவிர மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.…

சம்பள பாக்கி வேண்டாம் சாய் பல்லவி

படி படி லேச்சே மனசு’ படம் தோல்வியடைந்தவுடன், சம்பள பாக்கி வேண்டாம் என்று கூறியதன் பின்னணியை குறித்து சாய் பல்லவி விளக்கம் அளித்துள்ளார். ஷர்வானந்த், சாய் பல்லவி நடிப்பில் பல கோடி ரூபாய் செலவில், கடந்த ஆண்டு இறுதியில் வெளியான தெலுங்குப் படம் ‘படி படி லேச்சே மனசு’. இப்படம் அங்கே பெரிய அளவில் வரவேற்பைப் பெறாததால் தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம். இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள சாய் பல்லவி, “நான் அப்படத்தின் தயாரிப்பாளரிடம் பேசினேன். எனக்குத் தர வேண்டிய பணம் இப்போது உங்களிடமே இருக்கட்டும். உங்களுக்கு மீண்டும் பணம் கிடைத்த பிறகு எனக்குத் தரலாம். இல்லையென்றாலும் பரவாயில்லை என்றேன். அந்தப் பணம் என்னைவிட அவருக்குத் தான் இப்போதைக்கு தேவை என நினைத்துதான் அப்படிச் சொன்னேன். ஆனால் தயாரிப்பாளரோ,‘இல்லை, இதை எனது அடுத்த படத்துக்கான…

முதல் பார்வை: காஞ்சனா- 3 : வறட்சியின் நிழல் !

ஆஸ்ரமக் குழந்தைகளையும், காதலியையும், தன்னையும் அழித்த அமைச்சரைப் பழிவாங்கத் துடிக்கும் காளி என்கிற பேயின் கதையே 'காஞ்சனா 3'. சென்னையில் இருக்கும் ராகவா லாரன்ஸ் தன் தாத்தா- பாட்டியின் 60-ம் கல்யாணத்துக்காக குடும்பத்தினருடன் கோவை செல்கிறார். அங்கிருக்கும் மாமன் மகள்கள் மூவரும் லாரன்ஸையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள். ஓவியா, வேதிகா, நிக்கி தம்போலி என்ற மூன்று பெண்களுடன் அவரும் ஜாலியாக டூயட் பாடுகிறார். இதனிடையே ஊருக்கு வரும் வழியில் லாரன்ஸ் செய்த விளையாட்டுத்தனமான வேலை வினையாகி தாத்தாவின் வீட்டைப் பதம் பார்க்கிறது. இதனால் லாரன்ஸுக்குள் மொத்தமாக இறங்கிய இரு பேய்கள் ஆட்டம் போட, வீடே அதகளம் ஆகிறது. உண்மையில் அந்த ரோஸி, காளி என்ற பேய்கள் யார்? அவர்களின் முன் கதை என்ன? காளி லாரன்ஸின் உடலுக்கு புகுந்து யாரைப் பழிவாங்குகிறார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது…

அமமுக பொதுச்செயலாளர் ஆனார் டிடிவி. தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவராக சசிகலா செயல்படுவார் என்று அமமுக அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு அதிமுகவில் குழப்பங்கள் ஏற்பட்டன. சசிகலா தரப்பினரை ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் சேர்ந்து கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் பொதுச் செயலாளராக சசிகலாவும் துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் நியமிக்கப்பட்டனர். எனினும் அதிமுகவைக் கைப்பற்ற முடியாது என்பதால் தினகரன் அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்யவில்லை. கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு டிடிவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் பொதுச்சின்னத்தை அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அமமுகவைப் பதிவு செய்யுமாறு டிடிவி தினகரனுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில்…

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 72 சதவீத வாக்குப் பதிவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில், அரசியல் நோக்கர்கள் இரு தரப்பான கருத்துக்களை முன்வைக்கின்றனர். 17-வது மக்களவைக்கான தேர்தல் நடந்து வருகிறது. 7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவைத் தேர்தலில் 2-வது கட்டமாக 95 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் தமிழக்தில் வேலூர் தொகுதி நீங்கலாக 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் ஒருதொகுதிக்கும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதில் தமிழகத்தில் மட்டும் 72 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹூ தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை 72 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பொதுவாக வாக்கு சதவீதம் அதிகரிக்கும் போது, மக்கள் எடுக்கும் முடிவு ஏதாவது அணிக்கு சாதகமாக இருக்கும் என்பதையே காட்டுகிறது. கடந்த முறை 39 தொகுதிகளில்…

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19: 16

உமது கைகளில் எனது ஆவி. சகோதரன். பிரான்;சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என்ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச்சொல்லி, ஜீவனை விட்டார். நு}ற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு, மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். இந்தக் காட்சியைப்பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். லூக்கா 23:46-4 தமிழில் மிகஅழகாக சொல்லுவார்கள், தெரிவுச்சுயாதீனம் இல்லாவிட்டால் கீழ்படிவதில் அர்த்தமில்லையென்று. இதன் கருத்து தெரிவில் தீர்மானம் இல்லா விட்டால் கீழ்படிவதில் பயனில்லை. விலக்கப்பட்ட கனியை புசிப்பதும் புசியாதிருப்பதும் ஆதாம் ஏவாளின் தெரிவுச் சுயாதீனத்திற்குள் இருந்தது. இதை நாம் ஆதியாகமம் 2:16-17 இல் காணலாம். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.…