இயக்குநர் மகேந்திரனை அவமானப்படுத்திய கலைமேதை!

இயக்குநர் மகேந்திரனை கலைமேதை ஒருவர், கைகுலுக்க வரும் போது அவமானப்படுத்தினார். அதற்காக ரொம்பவே வருந்தினார் மகேந்திரன்'' என்று நினைவஞ்சலிக் கூட்டத்தில், நக்கீரன் கோபால் குறிப்பிட்டார். இயக்குநர் மகேந்திரன் சமீபத்தில் காலமானார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில், அவருக்கு நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நக்கீரன் கோபால் கலந்துகொண்டு பேசியதாவது: ''1992-ம் வருடத்தில் இருந்தே மகேந்திரன் சாருக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு. அவரை அண்ணன் என்றுதான் அழைப்பேன். அப்போது ஒருமுறை அவர் வீட்டில் இருந்து எனக்கு போன் வந்தது. ‘மூணுநாளா ரூம்லேருந்தே வெளியே வரமாட்டேங்கிறாரு’ என்று சொன்னார்கள். நான் உடனே போனேன். அவரிடம் என்ன ஏது என்று விசாரித்தேன். சமீபத்தில் ஒரு விழாவுக்குச் சென்றபோது, ஒரு கலைமேதையை அவர் சந்தித்ததாகவும் அப்போது கைகுலுக்க இவர் கையை நீட்டியதாகவும் உடனே அந்த மேதை, கையைத் தட்டிவிட்டதாகவும் ‘எனக்குள்ளே…

உங்கள் பிரச்சாரம் இல்லையே? பதிலளித்த வடிவேலு

விஜயகாந்துடன் ஏற்பட்ட பிரச்சினைக்குப் பிறகு, திமுக-வில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. அந்தத் தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து அரசியல் களத்திலிருந்து ஒதுங்கியே இருந்தார் வடிவேலு. இந்தத் தேர்தலில் சாலிகிராமத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்தார் வடிவேலு. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில், “இந்தத் தேர்தல் திருவிழாவுக்குச் சமம். மக்கள் நல்லா யோசித்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று சொல்லும் நேரம் இதுவல்ல. மக்கள் ரொம்ப அழகா தெளிவாக இருக்கிறார்கள். போய் போட்டுட்டு வந்துருவோமா. போய் எதிலாச்சும் குத்திட்டு வந்துருவோம். எவன் பகையும் வேண்டாம் என்று நம்ம பாட்டன் எல்லாம் சொல்வார்கள். அதே மாதிரி வாக்குச்சீட்டில் அனைவருக்கும் வாக்களித்துவிட்டு சீட்டையும் கையிலே வைச்சிருப்பது மாதிரி என் படத்தில் ஒரு காமெடி காட்சி வைச்சிருப்பேன். இன்று அப்படியல்ல, உலகம் உள்ளங்கைக்குள் வந்துவிட்டது. யார்கிட்டயும் கேட்டு ஓட்டுப்…

திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை

மதுரையில் வாக்குச்சாவடி அருகே திமுக பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் விகே.குருசாமி. திமுக பொதுக்குழு உறுப்பினரான இவர், மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டலத் தலைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக மண்டலத் தலைவர் ராஜ்பாண்டிக்கும் ஏற்கெனவே தேர்தல் மற்றும் அரசியல் ரீதியாக முன் விரோதம் உள்ளது. இருதரப்பிலும் பழிக்குப்பழியாக இதுவரை 14 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குருசாமியின் மருமகன் எம்எஸ்.பாண்டி (46). காமராஜபுரம் பகுதி திமுக செயலாளராக இருந்தார். வழக்கறிஞரான இவர் மீது ராஜ்பாண்டி கொலை வழக்கு உட்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ராஜ்பாண்டி தரப்பால் பாண்டிக்கு ஏற்கெனவே ஆபத்து இருந்தது. இந்நிலையில், இன்று காலை பாண்டி தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். சிந்தாமணி நல்லமுத்து ரோடு சந்திப்பு அருகில்…

தமிழகம் முழுவதும் 63.73% வாக்குப்பதிவு

தமிழகம் முழுவதும் 5 மணி நிலவரப்படி 63.73 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. மத்திய சென்னை, தென் சென்னை, கன்னியாகுமரியில் மந்தமான வாக்குப்பதிவாக உள்ளது. 17 வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு வேகமாக நடந்தது. 5 மணி நிலவரம் வாக்குப்பதிவு சதவீதம் மாவட்ட வாரியாக 1. திருவள்ளூர் 64.08 2. வடசென்னை 59.00 3. தென்சென்னை 56.71 4. மத்திய சென்னை 55.74 5. ஸ்ரீபெரும்புதூர் 58.53 6. காஞ்சிபுரம் 62.56 7. அரக்கோணம் 66.26 8. கிருஷ்ணகிரி 65.34 9. தர்மபுரி 67.67 10. திருவண்ணாமலை 65.00 11. ஆரணி 76.49 12. விழுப்புரம் 66.52 13. கள்ளக்குறிச்சி 69.42 14. சேலம் 66.18 15. நாமக்கல் 65.92 16. கோவை 59.98 17.…

வடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது

வடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்ட ஆயுதம் ஒன்றுடன் பரீட்சை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை இதுவாகும். வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில் சில பணிகள் நடப்பதாக செயற்கைகோள் படங்களில் தெரிய வந்ததாக தகவல் வெளியான நிலையில் புதிய சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது. ஆனால் தென்கொரியா செய்த இச்சோதனை தொடர்பாக எந்த ரேடார் தகவல்களையும் பெறவில்லை.எனவே ஏவுகணை சோதனையாக இந்த சோதனை இருக்காது தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகக் கிண்ண இலங்கை அணி அறிவிப்பு

ஐ.சி.சி. உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆவது ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மே 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இப்போட்டி தொடருக்கான திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணியின் 15 வீரர்கள் அடங்கிய பெயர் பட்டியலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (18) பிற்பகல் வெளியிட்டுள்ளது. அணி 1. திமுத் கருனாரத்ன (அணித்தலைவர்) 2. அவிஷ்க பெனாண்டோ 3. லஹிரு திரிமான்ன 4. குசல் மெண்டிஸ் 5. குசல் ஜனித் பெரேரா 6. அஞ்சலோ மெத்திவ்ஸ் 7. தனஞ்சய டி சில்வா 8. ஜெப்ரி வந்தெர்செய் 9. திசர பெரேரா 10. இசுரு உதான 11. லசித் மாலிங்க 12. சுரங்க லக்மால் 13.…

விபத்தில் உயிரிழந்த 10 பேரின் உடல்களும் உறவினர்களிடம்

பதுளை - மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரினதும் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திடீர் மரண பரிசோதனைகளின் பின்னர் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேற்று (17) அதிகாலை 1.30 மணியளவில் மோதி ஏற்பட்ட விபத்தில் மட்டக்களப்பை சேர்ந்த 10 பேர் உயிரிழந்னர். விபத்தில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தமை மட்டக்களப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வேனில் பயணித்தவர்கள் கடந்த திங்கட்கிழமை கொழும்பில் உள்ள உறவினர்களின் வீட்டுக்கு சென்று விட்டு அம்பாறையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வேன் ஓட்டுனருக்கு நித்திரை ஏற்பட்டு பாதையில் பிழையான பக்கத்தால் பயணித்தால் குறித்த விபத்து இடம்பெற்றிருக்கலாம்…