இந்திய தேர்தல் 2019 செய்தி துணுக்குகள்

ஆண்டிப்பட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல் செய்தது தொடர்பாக வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியது. பணம் பறிமுதல் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியது. வார்டு எண்கள் குறிப்பிட்டு 97 கவர்களில் இருந்த பணத்தை வருமானவரித்துறை பறிமுதல் செய்தது. தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வருமானவரித்துறை அறிக்கை அனுப்பியது.
———–
பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது போல் வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் நடந்துகொள்கிறது என்று சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதிமுக, பாஜகவுக்கு எதிரான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை; காழ்புணர்ச்சியினால் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
———–
சாத்தூர் அருகே எதிர்க்கோட்டையில் உள்ள அமமுக வேட்பாளர் சுப்பிரமணியன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியன் அலுவலகம், தோட்டத்தில் இருந்து ரூ.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவரது வீட்டில் 5 பேர் கொண்ட வருமானவரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.
————

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்ததற்கு எதிராக அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்தது சரியே என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

———-

இந்தியா முழுவதும் இதுவரை ரூ.2628.43 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ரூ.514.57கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

——–

பிற்படுத்தப்பட்டவன் என்பதால் ராகுல் காந்தி எப்போதும் என்னை கிண்டல் அடிக்கிறார் என பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

மராட்டியத்தில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, வாரிசு அரசியலில் ஈடுபடுபவர்கள் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள். என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரே இனத்தையே களங்கப்படுத்துகிறார்கள். அவர்களது பேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

இனியும் நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன். நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன். அதனால் வாரிசுதாரர்கள் என்னை பார்த்து கேலி செய்கிறார்கள். நான் காவலாளி என்றால் திருடன் என்கிறார்கள். உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோ‌ஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

Related posts