சண்டையா… சமாதானமா? கோதாவில் ஹீரோக்கள்

கோலிவுட்டில் பிரபல நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் போது கடும்போட்டி நிலவுவதுண்டு. இதனால் ஏதாவது ஒரு படம் ஹிட்டாகி வசூலை அள்ளுவதும், மற்றொரு படம் வசூல் குறையும் நிலை யும் இருக்கிறது. சமீபகாலமாக அந்த போட்டியை தவிர்க்கும்போக்கு ஹீரோக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பாகுபலி பிரபாஸ் நடித்த சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.

அதேநாளில் சூர்யா நடித்துள்ள காப்பான் படமும் வெளி யாவதாக அறிவிக்கப்பட்டது. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்யா, சாயிஷா போன்றவர்கள் நடித்திருப்பதுடன் பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகியிருக்கிறது. தற்போது போட்டி நிலை மாறியிருக்கிறது.

பிரபாஸ் படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாவதால் காப்பான் பட ரிலீஸ் ஆகஸ்ட் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதேபோல் அஜீத் நடிக்கும் நேர் கொண்ட பார்வையும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்போது முன்னதாக ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் எனப்படுகிறது.

சண்டையோ… சமாதானேமோ எது எப்படியிருந்தாலும் வரும் ஆகஸ்ட் மாதம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையப்போவது உறுதி.

Related posts