போலீஸ் அதிகாரி-இளவரசியாக2 வேடங்களில் ஆண்ட்ரியா!

கதாநாயகனுடன் மரத்துக்கு மரம் ஓடிப்பிடித்து விளையாடும் கதாநாயகியாக நடிப்பதில் உடன்பாடு இல்லாதவர், ஆண்ட்ரியா. கனமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘வடசென்னை’ படமே இதற்கு சாட்சி. வெற்றிமாறன் டைரக்‌ஷனில் வெளிவந்த அந்த படத்தில் பழிவாங்கும் மனைவியாக, ‘சந்திரா’ என்ற வடசென்னை பெண்ணாக நடித்து, மிரட்டியிருந்தார்.

இதைத்தொடர்ந்து கதாநாயகியை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட ‘மாளிகை’ என்ற படத்தில், ஆண்ட்ரியா நடிக்கிறார். இந்த படத்தில் அவர் 2 வேடங்களில் நடிக்கிறார். துணிச்சல் மிகுந்த போலீஸ் அதிகாரி மற்றும் இளவரசி ஆகிய இரண்டு வேடங்களில் அவர் நடித்து வருகிறார். தில் சத்யா டைரக்டு செய்கிறார். இவர் சில கன்னட படங்களை இயக்கியிருக்கிறார்.

“இது, ஒரு பழிவாங்கும் பேய் படம். இதில், ஆண்ட்ரியா மிகுந்த ஆர்வத்துடன் நடித்து வருகிறார். தொடர்ந்து இதுபோன்ற கனமான வேடங்களில் நடிக்கவே விரும்புகிறேன்” என்கிறார், ஆண்ட்ரியா.

Related posts