‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளர் பிரியங்கா பாடகர் ஆனார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றவர் பிரியங்கா. இவர் தற்போது ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் பின்னணிப் பாடகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார்.

‘கொடிவீரன்’ படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தேவராட்டம்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ‘மதுர பளபளங்குது’ என்ற பாடல் இன்று யூடியூபில் வெளியானது. மோகன்ராஜன் எழுதிய இப்பாடலுக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி, நிவாஸ் கே.பிரசன்னா, நிரஞ்சனா ரமணன், பிரியங்கா ஆகியோர் ‘மதுர பளபளங்குது’ பாடலைப் பாடியுள்ளனர்.

‘சூப்பர் சிங்கர்’ தொகுப்பாளராக இருக்கும் பிரியங்காவின் முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக பிரியங்கா அறிமுகம் ஆகியுள்ளார். இதனை தன் ட்விட்டர் பக்கத்திலும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts