வல்வையின் பிரபல விளையாட்டு வீரர் மு. தங்கவேல் மறைவு அஞ்சலி

வாழ் நாள் சாதனையாளர் வல்வையின் பிரபல விளையாட்டு வீரர்
அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
அவர்களுக்கான இதய அஞ்சலி…!

அன்பான தங்கண்ணாவே ஆருயிர் கலந்த உறவே..
நீலத்தை இரண்டாக்கி வானத்தில் பறந்ததே புளுஸ் – இன்றோ
நீலத்தை இழந்து நிறமின்றி தவிக்கிறதே வல்வை புளுஸ்..
அருமை அண்ணாவே அழுவதற்கு முடியவில்லை அழுகிறேன்..

நீலத்தை இழந்த வானத்தில் உன்னை தேடுகிறேன் நீளமான
வல்வை கடலே நீயும் நீலமின்றி அழுவதென்ன..?
கறுப்பு தங்கம் எங்கள் தங்கவேல் அண்ணா போலொருவர்
வல்வைக்கு வரத்தான் முடியுமோ..? வெற்றிடமானதே ஊர்..

வெற்றிக் கிண்ணங்கள் தாங்கிய உங்கள் வீரக்கரங்கள்
வீழ்ந்து கிடக்குமென கனவும் கண்டதில்லை தங்கண்ணா..
போட்டி என்று வந்தால் ஈட்டி போல் பாயுமே உங்கள் பந்து..
எதிரணி வீட்டு காற்றும் பேசுமே உங்கள் புகழை.

பாக்கு நீரிணையை பக்கத்து தெருபோல கடந்த வீரனே..
சொந்த ஊரே சுகமென வாழ்ந்த சுந்தர தமிழ் நிலவே..
பேருக்கும் புகழுக்கும் ஆசையின்றி ஊருக்காய் வாழ்ந்தவரே
தங்கத்தின் தங்கமே எங்கள் தங்கண்ணாவே என் செய்வேன்..

காலமே கடவுளே அகிலம் நிறை ஆண்டவனே..
வளமான வல்வை மாதாவின் வரலாற்று ஏடே
சங்கத்தமிழ் வீரன் போல பொறித்துக் கொள்
எங்கள் தங்கத்தமிழன் தங்கண்ணா பெயரை..

பரவட்டும் வான்வெளியில் உன் புகழ்..
நிலவட்டும் வல்வையில் உன் நிழல்..
தங்கமே எங்கள் தங்க பதக்கமே வணக்கம்..!
ஆண்டவனே அண்ணனின் ஆத்மாவிற்கு சாந்தி கொடு..

ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி..!

உன் பிரிவால் வாடும்
அருமைத் தம்பி
ஏ.எஸ்.ஜெயபாலசிங்கம் ( கனடா )

கண்ணீர் அஞ்சலி

அமரர் முத்துக்குமாரு தங்கவேல்

தோற்றம் : 01.10.1946 மறைவு : 10.04.2019

வல்வை மண்ணை நிழல் கொடுத்து காத்த ஆலமரமே..
ஆரும் எதிர்பாராத நேரத்திலே வேரோடு விழுந்தனையோ..
பொய்யாய் இருக்காதோ செய்தி துடிக்கிறதே மனது..
கையாய் இருந்து காத்தவரே கண்ணுறங்க முடியவில்லை..

ஊருக்குள் சென்றால் ஓடிவந்தே உள்ளம் குளிர வைப்பாய்
ஒருவன் இருந்தால் போதுமென்ற ஊர் சொல்ல வாழ்ந்தாய்
தூண் ஒன்றை இழந்தே சரிந்து கிடக்கிறதே வல்வை
எத்தனை ஊர்வலம் கண்டாய் இன்று நீயே ஊர்வலமானாய்..

எதிர்வந்த புயல்களை எல்லாம் உன் நெஞ்சால் தடுத்தாய்
வெல்ல முடியாத கிண்ணங்களை வென்று முடித்தாய்
அள்ளி அள்ளி தந்தாய் அரும் பெரும் புகழை எல்லாம்
தங்கண்ணாவே எங்கண்ணா என்றே ஏற்றமும் பெற்றாய்..

பந்தடிக்கு உயிர் கொடுத்தாய் பந்தடித்து புகழடைந்தாய்
ஊருக்கு தோள் கொடுத்தாய் ஊரே நீயாக உயர்வடைந்தாய்
கோயில் முதல் குடிமக்கள் வரை அனைவரையும் தொட்டாய்
வல்வை சுவரில் தங்கண்ணா என்றே தங்கத்தில் பதித்தாய்

விளையாட்டின் வீர மகனே சென்று வா..
வல்வையில் நீல வானே சென்று வா..
ஆண்டவனே ஏற்றுக்கொள் அன்பு மலரை..

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி..!

கனடா வாழ்
வல்வை மக்கள்

Related posts