ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கும் த்ரிஷா

ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை ‘எங்கேயும் எப்போதும்’ இயக்குநர் சரவணன் இயக்குகிறார்.

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் சரவணன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.

சாலை விபத்தில் சிக்கி, சில காலம் ஓய்வில் இருந்தார் சரவணன். தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். இவருக்கு உதவும் விதமாக தான் உருவாக்கி வைத்திருந்த கதையைக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இக்கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது த்ரிஷாவுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Related posts