உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 14

இயேசுவின் சிலுவையும் அறிவுக்கெட்டாத அன்பும். சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் - டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிப10ரணத்தாலும் நிறையப்படவும், எபேசியர் 3:19 இந்தவாரத் தமிழ் பத்திரிகையில் வெளிவந்த பாப்பாண்டவரின் ஆபிரிக்க பிரயாணம் பற்றி நன்றாக அறிந்திருப்பீர்கள் என நான் நம்புவதனால் இத்தியானத்தை எழுது கிறேன். இன்னும் இரண்டு வாரத்தில் உலகம் முழுவதும் தேவனின் அன்பின் வெளிப்பாடாகிய இயேசுவின் மரணத்தை நினைவுகூரும் காலம் ஆகும். அலைகள் நேயர்களும் இயேசுவின் மரணத்தைப்பற்றி நன்குஅறிந்து கொள்ளும்படியான வேளையை தேவன் இந்த பத்திரிகைஊடாக உங்களுக்குத் தந்துள்ளார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறி, தேவனின் அறிவுக்கெட்டாத அன்பை அறியும்படியாக உங்களை அழைத்துச் செல்கிறேன். இன்று உலகம் அன்புக்காக ஏங்கிநிற்பதை நாம் நன்கு அறிவோம். மாறிப்போகும் மனித அன்பு ஒரு எல்லைக்குட்பட்டது என்று அறிந்தும் அதற்காக ஏங்கித்தவிர்க்…

வல்வையின் பிரபல விளையாட்டு வீரர் மு. தங்கவேல் மறைவு அஞ்சலி

வாழ் நாள் சாதனையாளர் வல்வையின் பிரபல விளையாட்டு வீரர் அமரர் முத்துக்குமாரு தங்கவேல் அவர்களுக்கான இதய அஞ்சலி...! அன்பான தங்கண்ணாவே ஆருயிர் கலந்த உறவே.. நீலத்தை இரண்டாக்கி வானத்தில் பறந்ததே புளுஸ் - இன்றோ நீலத்தை இழந்து நிறமின்றி தவிக்கிறதே வல்வை புளுஸ்.. அருமை அண்ணாவே அழுவதற்கு முடியவில்லை அழுகிறேன்.. நீலத்தை இழந்த வானத்தில் உன்னை தேடுகிறேன் நீளமான வல்வை கடலே நீயும் நீலமின்றி அழுவதென்ன..? கறுப்பு தங்கம் எங்கள் தங்கவேல் அண்ணா போலொருவர் வல்வைக்கு வரத்தான் முடியுமோ..? வெற்றிடமானதே ஊர்.. வெற்றிக் கிண்ணங்கள் தாங்கிய உங்கள் வீரக்கரங்கள் வீழ்ந்து கிடக்குமென கனவும் கண்டதில்லை தங்கண்ணா.. போட்டி என்று வந்தால் ஈட்டி போல் பாயுமே உங்கள் பந்து.. எதிரணி வீட்டு காற்றும் பேசுமே உங்கள் புகழை. பாக்கு நீரிணையை பக்கத்து தெருபோல கடந்த வீரனே.. சொந்த ஊரே…

கோட்டபாயா இரட்டை குடியுரிமை சிக்கலில் இருந்து மீண்டுவர முடியுமா..?

அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கையை வந்தடைந்தார். அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பூர்த்தி செய்துவிட்டதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறினார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க பெருந்திரளான மக்கள் காத்துநின்றனர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டிந்த வேளை, அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட விஜயம் ஒன்றினை மேற்கொண்டே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ அமெரிக்காவிற்கு சென்றிருந்தார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் மேலும் தீவிரமடைந்து வருவதாகத் தெரியவருகிறது. தனது அமெரிக்க பிரஜாவுரிமையை அவர் கைவிடத் தீர்மானித்தாலும், இலங்கை பிரஜாவுரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கைகளிலேயே தங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க…

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் நடிக்கும் த்ரிஷா

ஏ.ஆர்.முருகதாஸ் உருவாக்கிய கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை 'எங்கேயும் எப்போதும்' இயக்குநர் சரவணன் இயக்குகிறார். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் பிரபலமானவர் சரவணன். இவர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். 'எங்கேயும் எப்போதும்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்க, ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. சாலை விபத்தில் சிக்கி, சில காலம் ஓய்வில் இருந்தார் சரவணன். தற்போது பழைய நிலைக்குத் திரும்பியுள்ளார். இவருக்கு உதவும் விதமாக தான் உருவாக்கி வைத்திருந்த கதையைக் கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் முழுக்க நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இக்கதையில் நடிக்க த்ரிஷா சம்மதம் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது த்ரிஷாவுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

விஷால் தயாரிப்பில் உருவாகும் ‘இரும்புத்திரை 2’

விஷால் நடித்து, தயாரிக்க 'இரும்புத்திரை 2' உருவாகவுள்ளது. ஆனால், மித்ரன் இயக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. விஷால் நடித்து, தயாரித்து 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்த இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஷாலுக்கு ஒரு வெற்றிப் படமாக 'இரும்புத்திரை' அமைந்தது. தற்போது 'இரும்புத்திரை 2' படத்தை தயாரித்து, நாயகனாக நடிக்க விஷால் திட்டமிட்டுள்ளார். ஆனால், 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் 2-ம் பாகத்தை இயக்கவில்லை. இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் 'இரும்புத்திரை 2' படத்தை இயக்கவுள்ளார். அவர் கூறிய கதை விஷாலுக்கு மிகவும் பிடித்திருந்தது மட்டுமன்றி, 'இரும்புத்திரை' போன்றதொரு களத்திலேயே இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில்…

தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது

தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது; தமிழர்களால் மட்டுமே அது முடியும்" என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அடுத்த வாரம், அதாவது வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாநிலம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில், இன்று தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "இந்தியா மொழி, இனம், கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு வேறுபாடுகளை கொண்ட நாடு. அதை புரிந்துகொள்ளாத நரேந்திர மோதி வெறுப்புணர்வு…

உலகிலேயே மிகுந்த வன்முறையானது இந்து மதம்

லோக்சபா தேர்தலில் மும்பை வடக்குத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் பாலிவுட் நடிகை ஊர்மிளா மதோந்த்கர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இந்து மதத்தை அவதூறு செய்யும் விதமாக பேசியதையடுத்து அவர் மீது பாஜக தொண்டர் ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளார். பாலிவுட் நடிகை ஊர்மிளா மட்டுமல்லாது, டிவி தயாரிப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் ஊர்மிளாவை இப்படிப் பேசுமாறு தூண்டிய ராகுல் காந்தி ஆகியோர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுரேஷ் நக்வா என்ற பாஜக வேட்பாளர் போலீஸில் புகார் அளித்துள்ளார். ராஜ்தீப் சர்தேசாய் எடுத்த ஊர்மிளாவின் பேட்டியில், ஊர்மிளா “உலகிலேயே இந்துமதம்தான் வன்முறையான மதம்” என்று கூறியிருந்தார். இதனையடுத்து பாஜக தொண்டர், “இத்தகைய கருத்துகள் தவறானவை, மோசமானவை, அற்பத்தனமானவை. சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்ற இந்து மதத்தை வன்முறை மிகுந்தது என்கிறார் ஊர்மிளா இது இந்துக்கள் மீதான…

இந்தியாவின் தேர்தல் களம் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..

சில அறிவுகெட்ட முட்டாள்கள் நதிகளை இணைப்பதாக சொல்கின்றனர் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். பாஜக தனது தேர்தல் அறிக்கையில் நதிகளை இணைப்போம் என கூறியுள்ளது. இதனை சமீபத்தில் ரஜினிகாந்த் வரவேற்றுப் பேசினார். இந்நிலையில், கரூர் மக்களவைத் தொகுதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து நேற்று (வியாழக்கிழமை) நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: "இங்கு சில முட்டாள்கள், மடையர்கள், நதிகளை இணைக்கப் போகிறோம், அதற்கு நாங்கள் திட்டங்கள் வகுக்கப் போகிறோம், பல கோடிகளை ஒதுக்குகிறோம் என்று பல 'இடியட்ஸ்' பேசிக்கொண்டு அலைகின்றனர். ஏரியை, குளத்தை என் தாத்தன் வெட்டினான். கம்மாயை என் பாட்டன், முப்பாட்டன் வெட்டினான். கிணறு, ஊருணியை வெட்டினான். ஆற்றை நாங்கள் உருவாக்கவில்லை. அது இயற்கையின் பெருங்கொடை. அருவி தானாக பாதை கண்டு ஓடியது. எங்கே மேடு, எங்கு பள்ளம்,…