வண்ணத்திரை பேசும் சின்ன சின்ன சினிமா செய்திகள்

கதாபாத்திரத்துக்கு ஏற்ப சூர்யா தன் தோற்றத்தை மாற்றிக்கொண்டு நடிப்பார். கஜினி படத்துக்காக மொட்டை போட்டார், பேரழகன் படத்துக்காக எடுப்பான பல் வைத்துக்கொண்டு கூன் விழுந்த மாற்று திறனாளியாக நடித்தார். 7ம் அறிவு படத்திற்காக சிக்ஸ்பேக் வைத்தார். தற்போது புதிய படத்துக்காக வழுக்கை தலையாகிறார்.

இறுதிசுற்று பட இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சூர்யா. தொழில் அதிபர் ஒருவரின் வாழ்க்கையை தழுவி உருவாகும் இப்படத்திற்காக தொழில் அதிபராக நடிக்கும் சூர்யா வழுக்கை தலை தோற்றத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

————-

ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிக்கின்றனர். இதில் ஹீரோயினாக அலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்ஸி நடிக்க ஒப்பந்தமானார்கள். திடீரென்று டெய்ஸி தவிர்க்க முடியாத காரணத்தால் படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடுவதில் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர்.

நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யாவுக்கு ஸ்கிரின் டெஸ்ட் முடிந்தது. அவர் டெய்ஸிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்ஸியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்லும்.

———-

மாரி 2 படத்தில் நடித்துவிட்டு மீண்டும் மலையாளத்துக்கு சென்றுவிட்டார் சாய் பல்லவி. அதிரன் படத்தில் பஹத் பாசிலுடன் நடித்திருக்கிறார். இதில் மனோதத்துவ நிபுணராக பஹத் பாசில் நடிக்கிறார். களறி சண்டை கற்கும் பெண்ணாக சாய் பல்லவி நடித்திருப்பதுடன் களறி சண்டைக்காக அவர் மெனக்கெட்டு அந்த கலையை கற்றிருக்கும் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது.

அதில் வெறித்தனமாக களறி சண்டை போடுகிறார் சாய் பல்லவி. ‘கேரக்டரை உணர்ந்து அதில் மெய்மறந்து நடிப்பது எனது பாணி. களறி சண்டைக்காக சும்மா கேமராவுக்கு போஸ் தருவதில் எனக்கு விருப்பம் கிடையாது. அப்படி விரும்பும் இயக்குனர்களிடமும் நான் பணியாற்றுவது கிடையாது’ என்றார் சாய் பல்லவி.

————-

ஒண்ணு வாங்கனா ஒண்ணு இலவசம்னு சீசன் காலத்துல ஆஃபர் கிடைப்பதுபோல் நடிகை காஜல் அகர்வாலும் சீசன் ஆஃபர்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். கைவசம் அவருக்கு படங்கள் குறைந்த நிலையில் புத்திசாலித்தனமாக இந்த முடிவை எடுத்தி ருக்கிறாராம். காஜல் 2 கோடி சம்பளம் கேட்கிறார்.

அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் சம்பளத்தில் தள்ளுபடி கொடுங்கள் என்று கேட்டால் அவர்களுக்கு ஒரு ஆஃபர் தருகிறார். அதாவது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம்போடும் அதே சமயத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க சேர்த்து ஒப்பந்தம் போடணும். ஒரே நேரத்தில் ரெண்டு படம் ஒப்பந்தம் போட்டால் சம்பள தள்ளுபடி நிச்சயம் என்கிறாராம்.

————-

மாளிகை படத்தை டான்ஸ் மாஸ்டர் தில்.சத்யா இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, ஜே.கே, ஆலி, கே.எஸ்.ரவிகுமார் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை விஜய் ஆண்டனி வெளியிட்டார். பிறகு ஆண்ட்ரியா பேசியதாவது: இது முதலில் கன்னடத்தில் உருவாக வேண்டிய படமாக இருந்தது. ஆனால், தமிழில் எனக்கு மார்க்கெட் இருக்கிறது. அதனால், தமிழில் உருவாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்னார்.

இப்படத்தை உருவாக்கும் ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றியிருப்பது குறித்து மகிழ்ச்சி. ஆனால், தமிழில் இருப்பவர்களுக்கு ஏனோ அப்படி தெரியவில்லை. நான் பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளேன் என்றாலும், இதுதான் உண்மை நிலை. மாளிகை படத்தில் நடிக்க முக்கிய காரணம், எனக்கு இரட்டை வேடம் என்பதுதான். இந்த கதையும், படமும், என் நடிப்பும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

————-

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தா நடித்த கிளு கிளுப்பான காட்சி ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்த காட்சியால் அவரது கணவர் நாகசைதன்யா அப்செட் ஆனதும் இப்போது தெரியவந்துள்ளது. படத்தில் திருமணமான சமந்தா, தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருப்பது போல் நடித்திருந்தார்.

படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பாக இந்த காட்சியை பற்றி நாகசைதன்யாவிடம் கூறி நடிக்க அனுமதி கேட்டாராம் சமந்தா. வீட்டில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த நாகசைதன்யா, உடனே பயிற்சியை நிறுத்திவிட்டு இந்த படத்தில் நீ நடிக்கத்தான் வேண்டுமா? என அப்செட் ஆகி கேட்டிருக்கிறார். பிறகு சமந்தாவின் வற்புறுத்தல் காரணமாகவே அவருக்கு அனுமதி கொடுத்தாராம்.

Related posts