அலைகள் வாராந்தப் பழமொழிகள் 10.04.2019

01. வெற்றிக்கான ஒரு முக்கிய அம்சம் தானாக வந்து முயற்சிப்பதாகும். நீங்கள் முன்னேற முடியாதபடி நீங்களே உங்களை இழுத்துப் பிடித்திருப்பதை கண்டு பிடிக்காவிட்டால் தோல்வி வரும். 02. நீங்கள் அதிக மதிப்பில்லாதவர் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் இருந்தால் அதை நீக்கிவிடுங்கள். 03. உங்களால் முன்னேற முடியாது என்பதற்கான காரணங்களை நீங்களே உங்களுக்குக் கூறி உங்களை நீங்களே தாழ்த்துவதை கண்டுபிடியுங்கள் அதை மாற்றுங்கள். 04. உங்களை நீங்கள் நம்பாவிட்டால் மற்றவர்கள் உங்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள். 05. உங்கள் மனம் ஒரு சிந்தனை தொழிற்சாலை.. அது மிகவும் சுறுசுறுப்பான தொழிற்சாலை. அத்தொழிற்சாலை தினசரி எண்ணற்ற சிந்தனைகளை உற்பத்தி செய்கிறது. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள கொள்ள அதுவும் நம்பிக்கை மலர்களை பூத்து குலுங்கத் தொடங்கும். 06. உங்களால் ஏன் சாதிக்க முடியும் என்ற காரணங்களை தொடர்ந்து மனதில்…

பாபநாசம் படத்தோடு ரிலீஸானதால் என் படம் நாசமாகிவிட்டது

'பாபநாசம்' படத்தோடு ரிலீஸானதால் என் படம் நாசமாகிவிட்டது என நடிகர் விவேக் கூறியுள்ளார். விவேக், சார்லி, பூஜா தேவரியா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் உருவாக்கியுள்ள இப்படம் வரும் 19-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விவேக், சார்லி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தப் படம் குறித்து நடிகர் விவேக் பேசும்போது, ''எப்படி 'உதிரிப்பூக்கள்' படம் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருந்ததோ அதே போல 'வெள்ளைப்பூக்கள்' படமும் ஒரு ட்ரெண்ட்செட்டராக இருக்கும். இப்படத்தில் சார்லியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சார்லிக்குள் எப்போதும் ஒரு பண்பட்ட குணச்சித்திர நடிகர் இருக்கிறார். பொதுவாக நான் காமெடியனாக நடிக்கும் படங்கள் ஹிட் ஆகிவிடும். ஆனால் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துவிடுகிறது. நான் நடித்ததிலேயே சிறந்த…

என்.டி.ஆர் படம் தோல்வி: இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல்

மக்களிடையே 'என்.டி.ஆர்' படம் தோல்வியடைந்துள்ளதை இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியானது. என்.டி.ஆர் வேடத்தில் நடித்த அவரது மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சுமார் 1500 திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமே வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக சோபிக்கவில்லை. தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் படக்குழுவினருக்குp பாராட்டு தெரிவித்தார்கள். என்.டி.ராமாராவைப் பற்றி வெறும் 31 நாட்களுக்கு மட்டுமே ஆந்திர முதல்வராக இருந்த நன்டென்ட்லா பாஸ்கர ராவ் இப்போது யூடியூப்…

8 நாட்களில் 100 கோடி வசூலை எட்டிய ‘லூசிஃபர்’

மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் 8 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'லூசிஃபர்'. அரசியல் பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் படமான இதில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்களும் நடித்திருந்தனர். முரளி கோபி படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார். வெளியானதும் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மோகன்லால் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து என பலரும் பாராட்டினர். திரையிட்ட இடமெல்லாம் வசூலை குவித்துள்ள இந்தப் படம் வெளியான எட்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி, குறைந்த நாட்களில் இந்த வசூலை எட்டிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. இதற்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான 'புலி முருகன்' திரைப்படமே…

பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு திடீர் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள 'பி.எம். நரேந்திர மோடி' எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், திரைப்படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த சூழலில் இந்தத் தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் வகையில் 'பி.எம். நரேந்திர மோடி' எனும் திரைப்படத்தை சந்தீப் சிங் என்பவர் தயாரித்துள்ளார். ஓமங்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர மோடி பாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இப்படம் தேர்தல் நேரத்தில் திரையிடப்படுவதாலும், தேர்தலில் மக்களைப் பாதிக்கும் வகையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை, டெல்லி,…

ஸ்டாலின் பேச்சால் நெகிழ்ந்து போய் கண்கலங்கிய கனிமொழி

தூத்துக்குடி பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசப்பேச நெகிழ்ந்துபோன கனிமொழி கண்கலங்கி சிரமப்பட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தினார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுகிறார். கனிமொழிக்கும் தூத்துக்குடிக்கும் இருக்கும் தொடர்பு தேர்தலுக்கான ஒன்றல்ல. இதற்கு முன்னரே தனது எம்.பி. நிதியிலிருந்து பல உதவிகளை தூத்துக்குடிக்குச் செய்து வருகிறார். ஒரு கிராமத்தை தத்தெடுத்து உதவி வருகிறார். தூத்துக்குடி சம்பவத்தில் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரையே வேட்பாளராக நிறுத்தியது திமுக. தொகுதியில் கனிமொழி பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவதை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கனிமொழியை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கனிமொழி குறித்தும், அவர்களது தந்தை குறித்தும் பேசப்பேச…

ஆழ்ந்த வருத்தங்கள் ஜாலியன் வாலாபாக் படுகொலை

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்து நூறு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தச் சம்பவத்துக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் தெரஸா மே ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்தார். எனினும் முழுமையான மன்னிப்பு கோரவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து நடந்த விடுதலை போராட்டத்தை நசுக்க 1919-ல் ரவுலட் சட்டம் அமலாக்கப்பட்டது. இதை எதிர்க்கும் வகையில், அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கூடினர். ஆங்கிலேயரை எதிர்த்து சுதந்திரப் போராட்டப் பாடல்களையும் கூட்டத்தினர் பாடிக்கொண்டிருந்தனர். அங்கு தன் படையுடன் வந்த ஆங்கிலேய அதிகாரியான ஜெனரல் டயர், கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 1600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்திற்கும் அதிமானவர்கள் படுகாயம் அடைந்தனர். பிரிட்டிஷ் வரலாற்றில் அவமானமாக இடம்பெற்ற இந்தச் சம்பவத்திற்கு அந்நாட்டு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என சமீப ஆண்டுகளாகக்…