கோத்தபாய இரவோடு இரவாக வெளியேற்றினார்

வீதி அபிவிருத்தியின்போது யாருடைய காணியையும் பலாத்காரமாக பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ் நகர அபிவிருத்திக்காக 27 நகரங்களைச்சேர்ந்த பல குடும்பங்களை ஒரு சதமேனும் நஷ்டயீடு வழங்காமல் இரவோடு இரவாக வெளியேற்றினார் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

அத்துடன் மத்திய நெடுஞ்சாலையை எதிர்வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் திறந்துவைப்போம் எனவும் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நகர அபிருத்திக்கு பொறுப்பாக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ் நகரங்களை அபிவருத்தி செய்யும்போது பலாத்காரமாகவே மக்களின் காணிகளை பெற்றுக்கொண்டார்.

27 நகரங்களில் ஒரு சதமேனும் வழங்காமல் அந்த மக்களை இரவோடு இரவாக அவர்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றியே நகர அபிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவ்வாறான எந்த நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மக்களின் விருப்பத்துக்கமையவே காணிகளை பெற்றுக்கொண்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்றார்.

Related posts