நான் ஒரு போராளி! மம்தாவின் வாழ்க்கைக் கதை!

விதியை சில நேரங்களில் நம்பித்தான் ஆகவேண்டியிருக்கிறது.திரைப்பட வாய்ப்புக்காக கோடிக்கணக்கானவர்கள் தவம் கிடக்க, அப்படி ஓர் எண்ணமேயில்லாதவரைத் தேடிவந்து வாய்ப்பு கதவினைத் தட்டியது என்றால் வேறென்ன சொல்வது? மம்தா மோகன்தாஸ் நடிகை ஆனது யதேச்சையாக நடந்தது.மலையாளத் திரையுலகில் நாற்பத்தைந்து ஆண்டுகளாக மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஹரிஹரன். பிரேம் நசீர், மம்முட்டி, மோகன்லால் என்று மலையாளத் திரையுலகின் ஜாம்பவான்கள் அத்தனை பேரையும் இயக்கியிருப்பவர். மலையாளத்தின் மகத்தான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயரின் கதைகளை சினிமா ஆக்குவதில் பெரும் ஆர்வம் காட்டுபவர். இடையில் சுமார் ஆறு ஆண்டு காலம் படம் இயக்காமல் இருந்த ஹரிஹரன் ஒரு படமெடுக்க திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அது குறித்த யோசனையில் இருந்தார். யதேச்சையாக மறைந்த நடிகை மோனிஷாவின் அம்மா ஸ்ரீதேவி உண்ணியை அப்போது சந்தித்தார். மோனிஷாவை நினைவிருக்கிறது இல்லையா. தமிழில்கூட கார்த்திக்கோடு ‘உன்னை நெனைச்சேன் பாட்டு படிச்சேன்’…

இந்திய அனுபவம் என்னைத் தட்டியெழுப்பி விட்டது: வில் ஸ்மித்

இந்தியாவுக்குப் பயணப்பட்டது தனக்குள் தன்னைப் பற்றிய புதிய புரிதலை தட்டியெழுப்பியுள்ளது என நடிகர் வில் ஸ்மித் பதிவிட்டுள்ளார். மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் இந்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு அதைப் பாராட்டுவதும், அதற்காகத் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்வதும் இங்கு அடிக்கடி நடக்கும் நிகழ்வு. மேற்கத்திய பிரபலங்கள் பலரும் இந்தியாவுக்கு வந்து தங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் உணர்ச்சி பொங்க பகிர்ந்து, பாராட்டிப் பேசியுள்ளனர். மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், தன் வாழ்வில் இந்தியப் பயணமே மிகப்பெரிய திருப்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தும் இந்தியப் பயண அனுபவத்தை சிலாகித்து அதைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "அனுபவங்கள் மூலம் கடவுள் நமக்குக் கற்றுக் கொடுப்பார் என என் பாட்டி சொல்வார். இந்தியாவுக்குப் பயணப்பட்டு, அதன் வண்ணங்கள், மக்கள் மற்றும் இயற்கை அழகை அனுபவித்தது…

இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு

பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகளால், இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பிரதேசம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இலங்கை தீவின் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கை எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க பி.பி.சி தமிழிடம் கூறினார். குறிப்பாக, இந்தியாவின் தமிழ் நாட்டின் அருகிலுள்ள மன்னார் வளைக்குடா பகுதியிலேயே அதிக இயற்கை எரிவாயு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மன்னார் முதல் தென் பகுதியின் காலி வரையான கடல் பிரதேசத்தில் இந்த எரிவாயு வளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் முதன்…

பாகிஸ்தான் உருவாகி இருக்காது: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விவேகமாக செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் உருவாகி இருக்காது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார். மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19-ம் தேதி வரை நடக்கிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம், லட்டூரில் இன்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது: இந்த தேசம் கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் சிறிது விவேகத்துடன் செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் எனும் நாடு உருவாகி இருக்காது. காங்கிரஸ்…

‘இந்து தமிழ் திசை’ இணையதள கருத்துக் கணிப்பு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அவறின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன. அதன் தொகுப்பு: திமுக கூட்டணி- 33 இடங்கள் திமுக -17 காங்கிரஸ் -8 மதிமுக -1 இந்திய கம்யூனிஸ்ட்-2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1 விடுதலை சிறுத்தைகள் கட்சி-1 கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-1 இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி-1 இந்திய ஜனநாயகக் கட்சி-1 மொத்தம்-33 திராவிட முன்னேற்றக் கழகம் 17 இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்கள் திமுக வசமாகும் என்று கருத்துக் கணிப்பு…

கோத்தபாய இரவோடு இரவாக வெளியேற்றினார்

வீதி அபிவிருத்தியின்போது யாருடைய காணியையும் பலாத்காரமாக பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கோத்தபாய ராஜபக்ஷ் நகர அபிவிருத்திக்காக 27 நகரங்களைச்சேர்ந்த பல குடும்பங்களை ஒரு சதமேனும் நஷ்டயீடு வழங்காமல் இரவோடு இரவாக வெளியேற்றினார் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார். அத்துடன் மத்திய நெடுஞ்சாலையை எதிர்வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் திறந்துவைப்போம் எனவும் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நகர அபிருத்திக்கு பொறுப்பாக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ் நகரங்களை அபிவருத்தி செய்யும்போது பலாத்காரமாகவே மக்களின் காணிகளை பெற்றுக்கொண்டார். 27 நகரங்களில் ஒரு சதமேனும் வழங்காமல் அந்த மக்களை இரவோடு இரவாக அவர்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றியே நகர அபிருத்தி நடவடிக்கைகளை…

மஹிந்த தரப்பே ஜனாதிபதியின் முதுகில் குத்தினர்

வெறும் பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி ஆட்சியை அமைக்க ஜனாதிபதி நடவடிக்கையெடுத்து அதில் நெருக்கடியை சந்தித்த நேரத்தில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லாது மஹிந்த தரப்பினர் ஜனாதிபதியின் முதுகில் குத்தினார்கள். இந்த மனக் கசப்புகளுடன்தான் மீண்டும் பேச்சுவார்த்தையில் அமர்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதியை காப்பாற்றவே வரவு செலவு திட்டத்தை நாம் எதிர்க்கவில்லை எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையான ஆதரவு இருக்கும் வரையில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை அசைக்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

போதை ஒரு மரண தண்டனை பின் ஏன் மரணதண்டனை

அவனே போதையும் புகைத்தலுமாக மரணத்தை விரட்டி சென்று பிடிக்கிறான்.. அவனை மரண தண்டனையால் திருத்தத்தான் முடியுமா..? அவன் அந்தத் தண்டனையை தானே அனுபவிக்கிறான்.. பிறகு தூக்கு கயிற்றை காட்டி என்ன பயன்..? போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தும் யோசனைக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீண்டும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதனால் போதைப்பொருள் பயன்பாடு குறைந்தமை தொடர்பில் போதியளவு ஆதாரங்கள் இல்லையென்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ரொமேனியா மற்றும் பிரித்தானியா ஆகிய ஐரோப்பிய நாடுகளும், நோர்வே, சுவிட்சர்லாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயங்களும் இது தொடர்பில் கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற 73ஆவது ஐக்கிய நாடுகள் பொது…

வாழும் வரை போராடு வழியுண்டு என்றே பாடு..! ஆளுநர்

நான் இருக்கும் கடைசி நிமிடம் வரை விழுந்துபோயுள்ள இந்த தேசத்தை திரும்பவும் வலிமைபெற வைப்பதற்கு எந்த தடை வந்தாலும் முயற்சிப்பேன் என்று வட மாகாண சபைக்கு சொந்தமான திணைக்களங்களில் பணிபுரிவதற்கு உள்வாங்கப்பட்ட அலுவலக உதவியாளர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஆளுநர் தலைமையில் நேற்று (08) இடம்பெற்ற இந்த நிகழ்வில் 91 அலுவலக உதவியாளர்கள் 4 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் (குடிசார்) மற்றும் 11 குடியேற்ற அலுவலர்கள் உள்ளிட்ட 106 உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் உரையாற்றும் போது ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில், இந்த நியமனக்கடிதம் வழங்குவதில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப பணியை செய்யப்போகும் மக்கள் நீங்கள். ஒரு நிறுவனத்தில் காரியாலய சேவகனை சந்தித்தே…