மகேந்திரன் கடந்து வந்த பாதை

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெகுசிலரே தனித்துவமான தெரிவார்கள். அப்படிப்பட்ட இயக்குநர்களில் மகேந்திரனும் ஒருவர். தனது தனித்துவமான இயக்கத்தால் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்தவர் மகேந்திரன் என்றால் மிகையல்ல. முள்ளும் மலரும் படம் மூலம் ரஜினிக்கு திருப்புமுனை தந்த இயக்குநரும் இவர். உடல்நலக்குறைவால் மறைந்த இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் கடந்து வந்த முற்களையும் மலர்ந்த மலர்களையும் சற்றே திரும்பி பார்ப்போம்.... ஆரம்பகால வாழ்க்கை மகேந்திரனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி. இவரது இயற்பெயர் ஜே.அலெக்ஸாண்டர். 1939ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி, ஜோசப் செல்லையா - மனோன்மணி தம்பதியருக்கு மகனாய் பிறந்தார். பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் உள்ள பள்ளியிலும், இண்டர்மீடியட் படிப்பை மதுரை, அமெரிக்கன் கல்லூரியிலும், அதைத்தொடர்ந்து இளங்கலை பட்டப்படிப்பை காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் முடித்தார். எம்ஜிஆர்., தந்த அடையாளம் 1958ம்…

அன்பு திருமணத்திற்கு பின்னர் மாறும் சமந்தா + ட்ரெய்லர்

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். கணவன் - மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் 'மஜிலி'. நேற்று (மார்ச் 31) வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திருமணத்துக்குப் பிறகு கணவருடன் இணைந்து நடித்தது, ஏன் இவ்வளவு காலம் கழித்து இணைந்து நடித்தேன் என்ற கேள்விக்கு சமந்தா கூறியிருப்பதாவது: நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும். 'மஜிலி' அப்படி…

மூத்த இயக்குநர் மகேந்திரன் காலமானார்

முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79 1978-ம் ஆண்டு ‘முள்ளும் மலரும்’ படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் மகேந்திரன். அதனைத் தொடர்ந்து 'உதிரிப்பூக்கள்', 'ஜானி', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'கை கொடுக்கும் கை' என பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். முன்னதாக, 'சபாஷ் தம்பி', 'நிறைகுடம்', 'கங்கா', 'திருடி' உள்ளிட்ட சில படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். கதையாக எழுதி கிடைத்த வரவேற்பைவிட, இயக்குநராக அவருக்குக் கிடைத்த இடம் மிகவும் பெரியது. 2006-ம் ஆண்டு வெளியான 'சாசனம்' என்ற படம்தான் மகேந்திரன் இயக்கிய கடைசிப் படமாகும். இதில் அரவிந்த் சாமி, கெளதமி, ரஞ்சிதா உள்ளிட்ட பலர் நடித்தனர். அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மூலம் நடிக்கவும் தொடங்கினார்…

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்ற 11 பேர் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சி செய்த இரு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் புத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 11 பேரும் பிரான்ஸ் செல்வதற்காக புத்தளத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்றைய தினம் (01) புத்தளம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு நாளை (03) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 10, 12 வயதுடைய இரு சிறுவர்கள் அவர்களது பெற்றோர் மற்றும் 26 தொடக்கம் 40 வயதுடைய சந்தேகநபர்கள் உள்ளிட்ட 11 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம், முந்தளம் உடப்பு பகுதிக்கு சென்று உடப்புவிலிருந்து கடல் வழியாக ட்ரோலர் படகின் மூலம் சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்லும் நோக்கில் புத்தளம் நகரில் தங்கியிருப்பதாக, புத்தளம் பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று…

இலங்கையில் இன்று முக்கியம் பெற்ற மூன்று முன்னணி செய்திகள்..

ஐ.நா. வின் துணைக்குழு இன்று இலங்கைக்கு சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு இன்று இலங்கை வரவுள்ளது. நான்கு பேர் கொண்ட இந்தக் குழு ஏப்ரல் 12 வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழவில் அடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்திக்க உள்ளனர். ஐக்கிய நாடுகள் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 22ம் திகதி வரை இடம்பெற்ற கூட்டத் தொடர் ஒன்றில் சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. --------------- பிரான்ஸ்…

நோர்வே நாட்டில் 240 கழகங்கள் பங்கேற்கும் உலக தமிழர் பூப்பந்தாட்டம்.

புலம் பெயர் தமிழர் மட்டுமல்ல இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான பூப்பந்தாட்டம் நோர்வேயில் நடைபெற இருக்கிறது. இதற்காக இதுவரை 240 கழகங்கள் முன்பதிவு செய்துள்ளன. இது குறித்து நோர்வே நாட்டிலிருந்து டென்மார்க் வந்த இரண்டு பூப்பந்தாட்ட வீரர்களுடன் சந்திப்பு.. அத்துடன் டென்மார்க் நாட்டின் கலைஞர், கரபந்தாட்ட மத்தியஸ்த்தர் ராஜா குணசீலனும் பங்கேற்கிறார். அலைகள் 02.04.2019 செவ்வாய்