ஐரா: தமிழகத்திலிருந்து முதல் பார்வை

பேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..? மீடியாவில் வேலை பார்க்கும் யமுனாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். யூ டியூப் ஆரம்பிக்கலாம் என்ற அவரது ஐடியாவை, அலுவலகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதனால் வெறுத்துப்போய் பொள்ளாச்சியில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்குப் போகிறார் யமுனா. பாட்டி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் யமுனாவுக்கு, இதையே வீடியோவாக்கி காசு பார்க்கலாம் என்ற ஐடியா தோன்றுகிறது. அதன்படி தன் பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் பேய் வீடியோ எடுத்து யூ டியூபில் பிரபலமாகிறார் யமுனா. ஒருநாள் நிஜமாகவே பேய்வந்து யமுனாவைத் துன்புறுத்த, அதிர்ச்சியாகிறார். இன்னொரு பக்கம், சென்னையில் வசிக்கும் அமுதனைச் சுற்றி மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள்…

பெண்கள் இயக்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை

முன்னாள் இயக்க உறுப்பினர்களாகிய பெண்கள் பலரும் சமூக, பொருளாதார நிலைமைகளில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். இத்தகைய பெண்களது நிலைமைகளை உணர்வுபூர்வமாக அறியும் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் அவசியமாகின்றன என்றுஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேற்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (27)இடம்பெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் 63345பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் கிழக்கில் 40000பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் பொருளாதார நிலையில் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கில் கடந்த ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் மிகவும் அதிகரித்துள்ளன. வட மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ் மாவட்டத்தில் 36ஆயிரத்து 334குடும்பங்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் 8ஆயிரத்து…

தமிழ் கைதிகளின் குடும்பத்தாருக்கும் மாதாந்தம் ரூ.10ஆயிரம்

காணாமற்போனோரின் குடும்பத்தாருக்கு 6ஆயிரம் ரூபா கொடுக்க எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை வரவற்கின்றேன்என்று கூறிய த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, சிறையில் இருக்கும் தமிழ் கைதிகளின் குடும்பத்தாருக்கும் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வீதம் கொடுக்க வேண்டுமென்றும் நேற்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (27)இடம்பெற்ற சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். காணாமற்போனோரின் குடும்பத்தாருக்கு 6ஆயிரம் ரூபா கொடுக்க எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தை வரவற்கின்றேன். அதேபோன்று சிறையில் இருக்கும் தமிழ் கைதிகளின் குடும்பத்தாருக்கும் மாதாந்தம் 10ஆயிரம் ரூபா வீதம் கொடுக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன். வடக்கு, கிழக்கில் 89ஆயிரம் விதவைகள் இருப்பதாக கூறுகின்றனர் அவர்களுடன் முன்னாள் போராளிகளின் மனைவிகள் மற்றும் கணவனை பிரிந்து வாழும் சுமார் 50ஆயிரம்…

மாகாண அதிகாரம் தெற்கே செல்ல அனுமதியேன் ஆளுநர்

மாகாணங்களின் அதிகாரம் மத்திக்கு திரும்பி செல்வதை தானும் விரும்பவில்லை என வடக்கு ஆளுநர் கூறியிருக்கிறார். இதுபோல பல்வேறு கருத்துக்களை அவர் கூறி வருகிறார். ஆனால் வடக்கில் ஆளுநராக இருப்பதில் உள்ள கடுமையை அவர் புரிந்துவிட்டதை அவருடைய தொடர்பற்ற உரைகள் காட்டுகின்றன.

தேர்தல் வருகிறது இது கூட்டமைப்பு வீர வசனம் பேசும் காலம்

பத்திரிகைகளின் தலைப்பு செய்திகள்.. சுதந்திரன் பா.உ ஆக இருக்கும் வரை தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடையாது, தமிழ் மக்களுக்கும் நின்மதி கிடையாது என்கிறார் ஆனந்தசங்கரி. தேர்தல் வருவதனால் அரசாங்கத்திற்கு எதிராக தமிழரசு கட்சியினர் வீர வசனம் பேச ஆரம்பித்து விட்டார்கள். நீ அடிப்பது போல அடி நான் அழுவது போல அழுகிறேன் என்று நீங்கள் நாடகமாடுவது நமக்கு தெரியும்.. முன்னாள் போராளிகளையும் சிறைக்கு தள்ளும் வேலையை உங்கள் சகாக்கள் ஆரம்பித்துவிட்டது நமக்கு தெரியும் என்றார்.