திட்டமிட்ட ரீதியில் வைத்தியசாலைகள் புறக்கணிப்பு

அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட ரீதியில் தமிழ் பிரதேச வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுவதாக பாரளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதாரம்,போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு, மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார ரீதியாக மறு மலர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தி அனைத்து மக்களுக்கும் தேவையான சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார். இதுவரை இருந்த சுகாதார அமைச்சர்கள் செய்யாத பல விடயங்களையும் அவர் செய்து வருகின்றார்.

ஆனால் சுகாதார இராஜாங்க அமைச்சர் தனது கட்சிக்காக, தனது தேவைகளை முன்னிட்டு தனது இனமக்கள் இருக்கும் பிரதேசங்களை மட்டும் மையப்படுத்தியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றார். தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளிலுள்ள வைத்திய சாலைகளை அவர் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

Related posts