டென்மார்க் உதைபந்தாட்ட அணி கடைசி நேரத்தில் அபார விளையாட்டு

டென்மார்க் உதைபந்தாட்ட அணிக்கும் சுவிற்சலாந்து உதைபந்தாட்ட அணிக்குமிடையே நேற்று முக்கியமான தேர்வு ஆட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்த ஆட்டம் ஆரம்பித்து முடிவடைவதற்கு பத்து நிமிடங்கள் இருக்கும் வரை சுவிற்சலாந்தின் கரங்களே அபாரமாக ஓங்கியிருந்தன. போட்டி முடிவடைய கடைசி பத்து நிமிடங்களே இருக்கும்வரை டென்மார்க் அணியால் ஒரு கோலைக்கூட போட முடியவில்லை.

ஆனால் முற்றிலும் எதிர்பாராத விதமாக டென்மார்க் தனது முதலாவது கோலை போட்டது, பின் இரண்டாவது கோலும் வாய்த்தது. ஆகவே மூன்றாவது கோலைப் போடாவிட்டால் இந்த இரண்டு கோல்களும் பெறுமதியற்றதாகவிடும் என்ற கள நிலவரம் உருவானது.

இதை உணர்ந்து டேனிஸ் வீரர்கள் சிறப்பாக விளையாடி அடுத்த கோலையும் போட்டு பத்தே பத்து நிமிடங்களில் மூன்று கோல்களை போட்டு சாதனை படைத்தனர்.

நான்காவது கோலையும் போட்டு வெற்றி வாகை சூடியிருந்தால் சரித்திர சாதனையாகியிருக்கும். இருந்தாலும் ஒன்று ஒன்று என்ற புள்ளிக்கணக்கில் ஆட்டம் சமமாக முடிவடைந்தது.

இதன் மூலம் ஐரோப்பா கிண்ண போட்டிக்கான தேர்வு நிலை போட்டியில் டென்மார்க் தனது முதல் ஆட்டத்தை சமன் செய்துள்ளது. அதுவும் சிறந்த அணியான சுவிஸ் அணியை சமன் செய்தது பெரிய விடயமாகவே இருக்கிறது.

டென்மார்க் ஐரோப்பா கிண்ணத்தை வென்று கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. பழைய புரி தேய்ந்த காணொளியையே இன்றும் தொலைக்காட்சிகளில் போட்டு மனம் ஆறி வருகிறார்கள்.

இப்படி அவலை நினைத்து உரலை இடிப்பதைவிட, ஏதோ ஒன்றரை வருடத்தில் 2020 வரவுள்ள ஐரோப்பா கிண்ணத்தையாவது வென்று காட்டுவதுதான் டென்மார்க் அணிக்கு நல்லது.

இல்லாவிட்டால் பாவம் அந்த காணொளியைத்தான் மறுபடியும் கையில் எடுக்க வேண்டி வரும்..

டேனிஸ் அணி மீண்டும் வெல்லுமா..?

அவர்களால் சாதிக்கத்தான்…

முடியுமா..?

அலைகள் 27.03.2019 புதன்

Related posts